அரசாங்கத்தினால் தேர்தல் வாக்குமூலம் அன்றி தற்போது நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டும் செயற்படுத்தப்படாத வேலைத்திட்டங்கள் மக்களுக்கு முன்வைக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்தார்.
அதன்படி மக்களிடமிருந்து அறவிடப்படும் வரிப்பணம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக மக்கள் எவ்விதத்திலும் அச்சப்படத் தேவையில்லை என அமைச்சர் குறிப்பிட்டார்.
அரசாங்கம் எப்போதும் அரச வருமானத்தை அதிகரிப்பதற்கு செயற்படுவதுடன், அது கிடைக்கப்பெறும் வரி வருமானம் மீண்டும் மக்கள் சேவைக்கே பயன்படுத்தப்படுவதாகவும், மக்களுக்குக் கிடைத்துள்ள நிவாரணத்தின் படி அது உறுதிப்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்தல் மாத்திரமன்றி எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள மீன்பிடி, விவசாய மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டமும் நாட்டில் செயற்படுத்தப்படுவதாகவும், அவைகளும் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிவாரணங்களே என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய மேலும் வலியுறுத்தினார்.