சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தை ஸ்தாபிக்கும் போது புதிய சேவை அதிகாரிகளாக உள்ளக ரீதியாக ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட சமுர்த்தி அதிகாரிகளுக்கு ஆரம்ப சேவை உத்தியோகத்தர்களாக வழங்கப்பட்டுள்ள நியமனத்தைத் திருத்துவதற்காக மீண்டும் சந்தர்ப்பம் வழங்குவதற்கு நிதி அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
அதன்படி இந்த யோசனையை அமைச்சரவை அனுமதி;க்கு சமர்ப்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் 3,027பேருக்கு இதற்கான சந்தர்ப்பம் கிடைப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
நீண்டகாலமாக தாம் எதிர்கொண்ட இப்பிரச்சினைகளால் ஏற்பட்டுள்ள அழுத்தம் தொடர்பாக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் நிதி அமைச்சின் அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்துவதற்காக நேற்று (22) உடனடித் தீர்வு வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டார்.