டெல்லி: மல்யுத்த வீராங்கனைகளுக்கான பாதுகாப்பு வாபஸ் தொடர்பான வினேஷ் போகத் குற்றச்சாட்டுக்கு டெல்லி காவல்துறை மறுப்பு தெரவித்து உள்ளது. யாருடைய பாதுகாப்பும் வாபஸ் பெறப்படவில்லை என குறிப்பிட்டுள்ளது. இந்திய மல்யுத்த சங்கத்தின் தலைவராக இருந்த பிரிஜ் பூஷன் பாலியல் தொல்லை அளித்ததாக வீராங்கனைகள் புகார் அளித்திருந்தனர். அவருக்கு எதிராக வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்துக்கு பிறகு பிரிஜ் பூஷன் மீது டெல்லி நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. […]