உலகிலேயே விலை அதிகமான கார் வேண்டுமா? எண்ணி பார்க்கவே முடியாத விலையில் விற்கும் கார்!

எளிமையாக வாழ நினைப்பவர்களைவிட, ஆடம்பரமாக வாழவே அனைவரும் விரும்புவதாக நினைக்கிறோம். உண்மையில், ஆடம்பரம், எளிமை என்பதெல்லாம் அவரவர் மனதை பொறுத்ததே. விலையுயர்ந்த வீடு, விலையுயர்ந்த ஆடைகள் மற்றும் நகைகளை பார்த்திருக்கலாம், ஆனால் ஒரு காரின் விலை ஒரு நாட்டின் பட்ஜெட் அளவுக்கு இருக்கும் என்பதை யோசித்து பார்த்ததுண்டா? 

உலகிலேயே விலை அதிகமான காரை வாங்குவதற்கு பலர் தயாராக இருக்க மாட்டார்கள். ஏனெனில் இதற்கு தேவை பணம் மட்டுமல்ல, காத்திருப்பும் கூட. ஆடம்பரத்திலும் படு ஆடம்பரமான காரை தயாரிப்பதில் ஆயிரக்கணக்கான மணிநேரங்கள் செலவிடப்பட வேண்டியிருக்கும்.

மிகப் பெரிய பணக்காரர் கூட இதை வாங்குவதற்கு முன் 100 முறை யோசிப்பார். அப்படிப்பட்ட ஒரு காரைப் பற்றி தெரிந்துக் கொள்வோம். விலை உங்களால் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு உள்ளது.

ரோல்ஸ் ராய்ஸ் லா ரோஸ் நொயர் டிராப்டெய்ல்

ரோல்ஸ் ராய்ஸ் லா ரோஸ் நொயர் டிராப்டெய்ல் நிறுவனம் சொகுசு கார்கள் துறையில் மீண்டும் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது. இந்த காரின் விலையை கேட்டால் திகைத்து போவீர்கள். இந்த கார் உலகின் விலை உயர்ந்த கார் என்ற பட்டத்தை பெற்றுள்ளது.

காரின் சிறப்பம்சங்கள்

ரோல்ஸ் ராய்ஸ் கார் தயாரிப்பு நிறுவனத்தின் La Rose Noire Droptail மிகவும் அழகான மற்றும் சிறப்பான கார். இதன் வடிவமைப்பு மிகவும் கவர்ச்சிகரமானது மற்றும் பல சிறப்பு அம்சங்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காரில் ஒரு பிரத்யேகமான கருப்பு பெயிண்ட் பயன்படுத்தப்பட்டுள்ளது, இது தனித்துவமான தோற்றத்தை அளிக்கிறது. காரின் உட்புறத்திலும் சிறந்த தரமான பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

சக்தி மற்றும் செயல்திறன்

La Rose Noire Droptail கார், சக்திவாய்ந்த 6.75 லிட்டர் ட்வின்-டர்போசார்ஜ்டு V12 இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது, இது 5250 rpm இல் 563 bhp ஆற்றலையும், 1500 rpm இல் 820 Nm உச்ச முறுக்குவிசையையும் உற்பத்தி செய்கிறது, அதன் ஆடம்பரமான நிலைக்குத் தகுந்த செயல்திறனை அளிக்கிறது.

விலை என்ன?

இந்த காரின் விலையை கேட்டால் மயக்கம் வராமல் இருந்தால் சரி. இந்த காரின் விலை 30 மில்லியன் டாலர்களுக்கு மேல், அதாவது 251 கோடி ரூபாய்க்கு அதிகமாகும். இந்த காரின் விலை இந்திய ரூபாயின்படி 2510000000க்கு மேல் இருக்கும். இந்த காரை தயாரிக்க தங்கம் உட்பட பல விலையுயர்ந்த உலோகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இயந்திரங்கள் மூலம் அல்லாமல் மனிதர்களால் மட்டுமே உருவாக்கப்பட்ட கார் இது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.