டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் முற்றிலும் புதிய ஜூபிடர் 110 மாடலை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. குறிப்பாக முந்தைய மாடலில் இருந்து மேம்பட்ட டிசைன் மற்றும் பல்வேறு மாறுதல் கொண்டு புதிய எஞ்சின் மற்றும் கவர்ச்சிகரமான வடிவமைப்பு குறிப்பாக ஆக்டிவா உள்ளிட்ட 110cc மாடலுக்கு கடும் சவாலினை ஏற்படுத்தும் வசதிகளை கொண்டிருக்கின்றது.
முந்தைய தோற்ற அமைப்பிலிருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கின்றது. வடிவமைப்பு அதே நேரத்தில் புதிய சேஸ் ஆனது ஏற்கனவே விற்பனையில் இருக்கின்ற ஜூபிடர் 125 ஸ்கூட்டருக்கு இணையாக மாற்றப்பட்டு பல சிறப்பம்சங்களை ஏற்படுத்தும் வகையில் கொண்டிருக்கின்றது.
டிவிஎஸ் ஜூபிடர் 110 டிசைன், வசதிகள் விமர்சனம்
முன்புறத்தில் பெரிய எல்இடி ரன்னிங் விளக்குடன் இணைந்த டர்ன் இண்டிகேட்டர் (பேஸ் வேரியண்டில் இல்லை) சேர்க்கப்பட்டுள்ளது. பின்புறத்திலும் இன்பினிட்டி எல்இடி என அழைக்கப்படுகின்ற நீளமான எல்இடி விளக்கு சேர்க்கப்பட்டு இன்டிகேட்டர் இணைக்கப்பட்டு இருக்கின்றது.
பக்கவாட்டில் உள்ள பேனல்கள் கூட முற்றிலும் மாறுபட்டு நவீனத்துவ தலைமுறைக்கு ஏற்ற வகையில் மேம்படுத்தப்பட்டிருக்கின்றது.
ஜூபிடர் 125 ஸ்கூட்டரில் இடம்பெற்று இருப்பதைப் போன்று முன்புறத்தில் பெட்ரோல் நிரப்பும் வசதி கொடுக்கப்பட்டு ப்ளோர் போர்டின் அடியில் பெட்ரோல் டேங்க் ஆனது 5.1 லிட்டர் கொள்ளளவு கொண்டதாக வழங்கப்பட்டுள்ளது.
ஒரே கீ லாக் கொண்டு எஞ்சின் ஸ்டார்ட் செய்வது வாகனத்தை லாக் செய்வது மற்றும் பின்புறத்தில் உள்ள ஸ்டோரேஜ் பகுதியை பயன்படுத்த திறப்பதற்கும், அதே நேரத்தில் பெட்ரோல் நிரப்புவதற்கும் ஒரே இடத்தில் ஆன வசதியை கொடுத்திருக்கின்றது.
இரண்டு ஹெல்மெட்டுகளை வைக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ள இருக்கைக்கு அடிப்பகுதியிலான ஸ்டோரேஜ் அமைப்பில் மிகவும் தாராளமாக 33 லிட்டர் கொள்ளளவுக்கு ஏற்ற பொருட்களை வைப்பதற்கு வசதியாக அமைந்திருக்கின்றது மற்றபடி இந்த பகுதியில் பூட் லைட் எதுவும் கொடுக்கப்படவில்லை மேலும் மிகச் சிறப்பான இந்த இட வசதியானது போட்டியாளர்களில் இல்லாத ஒன்றாக கருதப்படுகின்றது. முன்புற அப்ரானில் கூட இரண்டு லிட்டர் கொள்ளளவு கொண்ட வாட்டர் பாட்டில் ஸ்டோரேஜ் வசதி கொடுக்கப்பட்டிருக்கின்றது. அதே இடத்தில் யுஎஸ்பி சார்ஜிங் போர்ட்டும் அமைந்திருக்கின்றது.
எல்சிடி டிஜிட்டல் கிளஸ்டர் ஆனது டாப் வேரியண்டுகளில் கொடுக்கப்பட்டிருக்கின்றது. மற்ற வேறு ஏண்டிகளில் சாதாரண அனலாக் முறையிலான கிளஸ்டர் ஆனது இணைக்கப்பட்டிருக்கின்றது.
ஜூபிடர் 110 ஸ்கூட்டரில் SmartXConnect கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களுடன் ப்ளூடூத் வாயிலாக இணைக்கும் பொழுது டர்ன் பை டர்ன் நேவிகேஷன், கால் எஸ்எம்எஸ் அலர்ட், நிகழ் நேரத்தில் பெட்ரோல் இருப்பு, சராசரி மைலேஜ் விபரம் என பல்வேறு விபரங்களுடன் ஆப் வாயிலாக பல செயல்பாடுகளை நாம் தெரிந்து கொள்ள இந்த கிளஸ்டர் ஆனது உதவுகின்றது.
மெக்கானிக்கல் சார்ந்த அம்சங்களில் முன்புறத்தில் டெலஸ்கோபிக் பின்புறத்தில் மோனோ ஷாக் சஸ்பென்ஷன் இடம் பெற்றுள்ளது. இருபக்கமும் 90/90-12 அங்குல டயர் பெற்று இரு பக்க டயர்களிலும் ட்ரம் பிரேக் அல்லது முன்புறத்தில் 220 மிமீ டிஸ்க் பின்புறத்தில் டிரம் பிரேக் என மாறுபட்ட ஆப்ஷன்களில் கம்பைண்டு பிரேக்கிங் சிஸ்டத்தை கொண்டு இருக்கின்றது.
2024 டிவிஎஸ் ஜூபிடர் 110 பெர்ஃபாமென்ஸ்
மிக சிறப்பான வகையில் மைலேஜ் மேம்படுத்த டிவிஎஸ் நிறுவனம் iGO அசிஸ்ட் என்ற பெயரில் மைக்ரோ ஹைபிரிட் அம்சத்தை சேர்த்து புதிய 113.3சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 2024 ஜூபிடர் அதிகபட்சமாக 7.91PS பவர் மற்றும் 9.8Nm @ 5000rpm (with Assist) 9.2Nm @ 5000rpm (without Assist) டார்க் வெளிப்படுத்தும். இதில் சிவிடி கியர்பாக்ஸ் இடம் பெற்றிருக்கும்.
மணிக்கு அதிகபட்ச வேகம் 85 கிமீ எட்டுகின்ற இந்த மாடலில் உள்ள மற்றொரு வசதி சத்தமில்லாமல் ஸ்டார்ட் செய்யும் வசதி, போக்குவரத்து நெரிசல் அல்லது 5 வினாடிகளுக்கு மேல் காத்திருந்தால் தானாகவே அனைந்து ஆக்சிலிரேட்டரை இயக்கினால் எஞ்சின் இயங்க துவங்கும்.
மேடான உள்ள இடங்கள் மற்றும் கூடுதலான பவர் தேவைப்படும் இடங்களில் இந்த மைக்ரோ ஹைபிரிட் சிஸ்டமானது ஒர்க் ஆகிய நமக்கு கூடுதல் பவரை வழங்குவதுடன் மைலேஜ் சேமிக்க உதவுகின்றது இதனால் 10% வரை கூடுதல் மைலேஜ் கிடைக்கும் என ன குறிப்பிடும் நிலையில் நிகழ் நேரத்தில் சாலையில் இயக்கும் பொழுதுதான் நமக்கு எவ்வளவு கிடைக்கும் என்பது எதிர்காலத்தில் தெரியவரும்.
சிறப்பான பெர்ஃபாமென்ஸ் மற்றும் மைலேஜ் வழங்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ள இந்த எஞ்சின் ஆனது முழுமையான செயல் திறனை அறிந்து கொள்ளலாம். தற்பொழுது வெளிப்படுத்தப்பட்டுள்ள செயல் திறன் ஆனது மிகச் சிறப்பாகவும் கையாளுவதற்கு ஏற்றதாகவும் அமைந்திருக்கின்றது.
சஸ்பென்ஷன் ஓரளவு சிறப்பாகவே கையாளுகின்றது. இந்த மாடலுக்கு மேலும் பிரேக்கிங் அமைப்பில் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளதால் சிறப்பான பிரேக்கிகையும் பெற முடிகின்றது குடும்ப பயன்பாடுகளுக்கான இந்த ஸ்கூட்டரை பொறுத்தவரை இட வசதியும் நல்ல பெர்ஃபாமென்ஸும் கூடுதலான மைலேஜ் வழங்கும் என உறுதிப்படுகின்றது.
டிவிஎஸ் ஜூபிடர் 110 விமர்சன முடிவு
குடும்ப பயன்பாடுகளுக்கு ஏற்றதாக இருக்கும் வசதிகளை கொண்டிருக்கின்ற இந்த மாடலானது ஏற்கனவே சிறப்பான விற்பனையை எண்ணிக்கை ஆக்டிவா மாடலுடன் பகிர்ந்து வருகின்றது. இந்த நிலையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வசதிகள் கூடுதலான விற்பனையை எண்ணிக்கையை பதிவு செய்யவும் ஆக்டிவா ஸ்கூட்டருக்கு கடும் சவாலினை ஏற்படுத்தும் மாடலாகவும் விளங்க ஒரு முக்கிய காரணமாக அமைந்திருக்கும்.
குறிப்பாக ஆக்டிவா மாடலை விட குறைவான ஆரம்ப விலையில் துவங்குகின்றது அதே நேரத்தில் அதிகவசதிகளுடன் அமைந்திருக்கின்றது.
2024 டிவிஎஸ் ஜூபிடர் 110 ஸ்கூட்டரின் தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை ரூ.94,700 முதல் ரூ.1.11 லட்சம் ஆக அமைந்துள்ளது.