புதுடெல்லி: மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் எய்ம்ஸ் உள்ளிட்ட மருத்துவ கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
பட்டமளிப்பு விழாக்களில் பாரம்பரிய உடைகளை அணிவது குறித்தும், காலனி ஆதிக்கத்தின் நினைவுகளை அழிப்பது தொடர்பாகவும் பிரதமர் மோடி 5 அறிவுரைகளை கூறியிருந்தார்.
அதன்படி தற்போது அணியும் கருப்பு அங்கி, தொப்பி காலனியாதிக்க காலத்தை நினைவூட்டுகிறது. இந்த பழக்கம் ஐரோப்பாவில் இருந்து வந்தது. இனி அதற்கு பதிலாக, ஒவ்வொரு கல்வி நிறுவனமும் அமைந்துள்ள மாநிலத்தின் உள்ளூர் மரபுகள் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் புதிய பட்டமளிப்பு ஆடைகளை வடிவமைப்பு செய்து பயன்படுத்த வேண்டும். இவ்வாறு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.