பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் உத்தரப்பிரதேசத்தில், பிரதமர் மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை புகழ்ந்த மனைவிக்கு கணவர் முத்தலாக் கொடுத்த சம்பவம் வெளியில் தெரியவந்திருக்கிறது. இதில் சம்பந்தப்பட்ட மனைவி போலீஸில் அளித்த புகாரின் அடிப்படையில், கணவர் மற்றும் கணவரின் குடும்பத்தினர் மீது போலீஸார் எப்.ஐ.ஆர் பதிவு செய்திருக்கின்றனர்.
இதுகுறித்து ஊடகத்திடம் பேசிய புகார்தாரர், “பஹ்ரைச்சிலுள்ள மொஹல்லா சாராய் பகுதியைச் சேர்ந்தவர் நான். கடந்த ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி, அயோத்தியின் கோட்வாலி நகரிலுள்ள மொஹல்லா டெல்லி தர்வாசா பகுதியில் வசிக்கும் இஸ்லாத்தின் மகன் அர்ஷத் என்பவரைத் திருமணம் செய்துகொண்டேன். எனது தந்தை இருதரப்பினரின் சம்மதத்துடன், அளவுக்கதிகமாக செலவுசெய்து திருமணம் நடத்திவைத்தார். திருமணத்துக்குப் பிறகு, நான் ஊருக்கு வெளியே சென்றபோது, அயோத்தியின் சாலைகள், அப்பகுதியின் மேம்பாடு, அங்குள்ள சூழல் ஆகியவை எனக்குப் பிடித்திருந்தது. அதனால், என் கணவர் முன்னிலையில், பிரதமர் மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை புகழ்ந்தேன்” என்று கூறினார்.
இந்த விவகாரம் குறித்து பேசியிருக்கும் ஜார்வால் சாலை காவல் நிலைய இன்சார்ஜ் இன்ஸ்பெக்டர் பிரிஜ்ராஜ் பிரசாத், “இந்த சம்பவத்தால் கணவர் தன் மனைவியை அவரின் பெற்றோர் வீட்டுக்கு அனுப்பிவைத்தார். சில நாள்களுக்குப் பிறகு இருவீட்டாரின் உறவினர்கள் இதில் தலையிட்ட பிறகு, அந்தப் பெண் தனது கணவர் வீட்டுக்கு வந்தார். இருப்பினும், கணவர் தன்னைத் தாக்கி துன்புறுத்தி மூன்று முறை தலாக் கூறியதாக அந்தப் பெண் தெரிவித்திருக்கிறார்” என்றார்.
இதில் புகாரின் அடிப்படையில், பெண்ணின் கணவர் அர்ஷத், மாமியார் ரைஷா, மாமனார் இஸ்லாம், மைத்துனர் குல்சும், உட்பட 8 பேர் மீது, வரதட்சணை தடுப்பு சட்டம் மற்றும் முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88