புதுடெல்லி: போரினால் பாதிக்கப்பட்டு உள்ள உக்ரைனுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் அரசு முறை பயணம் மேற்கொண்டார். போரில் உயிரிழந்த குழந்தைகளுக்காக உக்ரைன் தலைநகர் கீவில் நினைவிடம் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு பிரதமர் நரேந்திர மோடியும் அதிபர் ஜெலன்ஸ்கியும் அஞ்சலி செலுத்தினர்.
அப்போது பிரதமர் மோடி, அதிபர் ஜெலன்ஸ்கியை ஆரத் தழுவி ஆறுதல் கூறினார். இந்த புகைப்படத்தை ஜெலன்ஸ்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். அடுத்த சில மணி நேரங்களில் 10 லட்சம் பேர் புகைப்படத்தை லைக் செய்தனர். நேற்றைய நிலவரப்படி 27 லட்சம் பேர் புகைப்படத்தை லைக் செய்துள்ளனர்.
இது, இன்ஸ்டாகிராமில் அதிக லைக்குகளை பெற்ற புகைப்படங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது. அதிபர் ஜெலன்ஸ்கியின் முந்தைய புகைப்படங்களில் ஒன்று இன்ஸ்டாகிராமில் அதிகபட்சமாக 7.8 லட்சம் லைக்குகளை பெற்றது.அந்த சாதனையை மோடி, ஜெலன்ஸ்கி புகைப்படம் முறியடித்துள்ளது.