2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூல வாக்காளர்களுக்கு அனுப்பப்படும் வாக்குச் சீட்டுகள் அடங்கிய பதிவு செய்யப்பட்ட பாதுகாக்கப்பட்ட பொதிகளை இன்று (26) முதல் தபால் திணைக்களம் ஏற்றுக்கொள்ளும் என்று பிரதி தபால் மா அதிபர் ராஜித கே ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென பிரதி தபால் மா அதிபர்கள், பிரதம கணக்காளர்கள், பிராந்திய தபால் அத்தியட்சகர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களுக்கும் தபால் திணைக்களம் விசேட அறிவித்தல் விடுத்துள்ளது. ஆத்துடன் உடனடியாக நடைமுநைக்கு வரும் வகையில் இன்று (26) முதல் ஜனாதிபதி தேர்தல் பணிகள் முடிவடையும் வரை அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையும் இரத்து செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான முறையான சுற்றறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.