சென்னை: தலைவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்க வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். அவர் அண்ணாமலை குறித்து மறைமுகமாக பேசியிருப்பதாக கூறப்படுகிறது. அதிமுக பாஜக இடையேயான வார்த்தை போர் உச்சத்தை தொட்டுள்ளது. இதன் எதிரொலி நேற்று நடைபெற்ற பாஜக கூட்டத்தில் எதிரொலித்தது. அதில் பேசிய அண்ணாமலை, எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அவர் ஒரு தற்குறி என்றும் கூவத்தூரில் ஊர்ந்து போய் முதலமைச்சர் பதவியை பிடித்தவர் என்றும் கடுமையாக சாடியிருந்தார். இது அதிமுகவினரிடையே கொந்தளிப்பை […]