பால் மற்றும் பால் பொருட்களின் பாக்கெட்டுகளின் மீது ‘ஏ1’ மற்றும் ‘ஏ2’ வகை என்று குறிப்பிடுவதை நீக்குமாறு உணவு வணிக செயற்பாட்டாளர்கள் மற்றும் இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான FSSAI கடந்த வாரம் அறிவுறுத்தியது. இந்த நிலையில் இந்த அறிவிப்பை வாபஸ் வாங்குவதாக இன்று அறிவித்துள்ளது. A1 மற்றும் A2 பாலில் பீட்டா-கேசீன் புரதத்தின் கட்டமைப்பு வேறுபடுவதாக உணவு வணிக நிறுவனங்கள் தங்கள் பால் பொருட்களின் பாக்கெட்டுகள் மீது குறிப்பிடுகின்றன. […]
