கியா இந்தியா நிறுவனத்தின் புதிய செல்டோஸ் காரில் கூடுதலாக சிறப்பம்சங்களை பெற்ற எக்ஸ்-லைன் வேரியண்டில் தற்பொழுது புதிய அரோரா கருப்பு நிறத்துடன் சிறிய டிசைன் மாற்றங்களுடன் கூடுதல் வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. மற்றபடி எஞ்சின் ஆப்ஷனில் தொடர்ந்து எந்த மாற்றங்களும் வழங்கப்படவில்லை.
இந்தியாவில் கியா நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்ட முதல் எஸ்யூவி மாடலான செல்டோஸ் வெளியிடப்பட்டு ஐந்தாண்டுகளை வெற்றிகரமாக கடந்துள்ள நிலையில் இந்த நிறுவனத்தின் மிக முக்கியமான மாடலாக வலம் வருகின்றது. செல்டோஸ் மேலும் பல்வேறு நாடுகளுக்கும் இந்திய சந்தையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றது.
உள்நாட்டில் மட்டும் சுமார் ஐந்து லட்சத்திற்கும் கூடுதலான விற்பனை எண்ணிக்கையை செல்டோஸ் பதிவு செய்திருக்கின்றது மேலும் இந்நிறுவனம் இந்தியாவில் 10 லட்சத்திற்கும் கூடுதலான வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
புதிய செல்டோஸ் எக்ஸ்-லைன் வேரியண்டில் எக்ஸ்ட்ரீயர் மற்றும் இன்டீரியரில் சுமார் 29 மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக என் நிறுவனத்தின் அறிக்கை குறிப்பிடுகின்றது. குறிப்பாக வெளிப்புறத்தில் இந்த மாடலின் பாடி கலர், பம்பர், கிரில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பளபளப்பான கருப்பு நிறமானது கொடுக்கப்பட்டிருக்கின்றது முன்புற கேலிப்பர் சில்வர் நிறத்திலும் 18 அங்குல அலாய் வீல் டைமண்ட் கட் டூயல் டோன் வழங்கப்பட்டுள்ளது.
இன்டீரியரில் ஸ்பிளென்டிட் சேஜ் க்ரீன் நிறத்துடன் பிளாக் சேர்க்கப்பட்டுள்ளது. சில இடங்களில் கருப்பு மற்றும் ஆரஞ்சு வண்ண தையல் கலவை கொடுக்கப்பட்டிருக்கின்றது.
1.5 லிட்டர் GDI டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக குதிரைத்திறன் 160 bhp மற்றும் 253 Nm டார்க் வெளிப்படுத்தும். இந்த மாடலில் 6 வேக இன்டலிஜென்ட் மேனுவல் மற்றும் 7 வேக டியூவல் கிளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.
புதிய 1.5-லிட்டர் VGT டீசல் என்ஜினைப் பொறுத்தவரை, 113 bhp மற்றும் 250 Nm டார்க்கை உருவாக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், 6 ஸ்பீட் இன்டெலிஜென்ட் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6-ஸ்பீட் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர் பொருத்தப்பட்டுள்ளது.
2024 கியா செல்டோஸ் X-Line (S) ரூ.19.65 லட்சம் மற்றும் X-Line ரூ.20.37 லட்சம் வரை (எக்ஸ்ஷோரூம்) ஆகும்.