கேரளாவில் கடந்த வாரம் நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானது. அதில் கேரள திரைத் துறையில் பாலியல் துஷ்பிரயோகம் குறித்த பல அதிர்ச்சியூட்டும் செய்திகள் இடம்பெற்றிருந்தன. அதைத் தொடர்ந்து பல்வேறு மூத்த நடிகைகளும் தங்களுக்கு நடந்த பாலியல் அத்துமீறல்கள் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர். அதில் பல பிரபல நடிகர்களும், டெக்னிஷியர்களின் பெயர்களும் அடிபடுகிறது. இந்த நிலையில், மலையாள திரையுலகில் இயங்கிவரும் இளம் நடிகை ஒருவர், பல்வேறு விருதுகளை வென்ற நடிகரும், இயக்குநருமான பாபுராஜ் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்.
இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், “ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்காக, திரைக்கதை எழுத்தாளர்கள் மற்றும் இயக்குநர்கள் என் பாத்திரத்தைப் பற்றி விவாதிக்க வருகிறார்கள் என, கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தின், ஆலுவாவில் உள்ள பாபுராஜின் வீட்டிற்கு வரக் கூறினார். அப்போதுதான் அவர் என்னை பாலியல் வன்கொடுமை செய்தார். இந்த சம்பவம் நடந்து ஒரு வருடம் கழித்து, எர்ணாகுளத்தில் உள்ள காவல்துறையை அணுகி புகார் அளிக்க முயன்றேன். ஒரு மூத்த காவல்துறை அதிகாரி எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யும்படி அறிவுறுத்தினார்.
ஆனால், அப்போது நான் கணவருடன் வெளிநாட்டில் இருந்ததால், என்னால் நேரில் வரமுடியாத சூழல் இருந்தது. பாலியல் வன்கொடுமை, துன்புறுத்தலை மூத்த கேரள திரையுலகில் பெரும்பாலான நடிகைகள் எதிர்கொள்கிறார்கள். எனவே அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு பாதுகாப்பான இடத்தை உறுதி செய்ய மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த குற்றசாட்டை மறுத்த மலையாள திரைப்பட நடிகர்கள் சங்கம் இணைச் செயலாளரும், நடிகரும், இயக்குநருமான பாபுராஜ், தன் மீது வைக்கப்பட்ட குற்றசாட்டுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88