எதிர்வரும் பெரும்போக நெல் விளைச்சலை அதிகரிக்கவும், நெல் பயிரிடும் விவசாயிகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டும் ஹெக்டேர் ஒன்றிற்கு வழங்கப்படும் உர மானியத்தை ரூ.25,000 வரை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக வெகுஜன ஊடக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (27) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
தற்போது விவசாயிகளுக்கு, ஹெக்டேருக்கு 15,000 ரூபாய் வழங்கப்படுகிறது. கடந்த வாரம் முன்வைக்கப்பட்ட பிரேரணையில் திருத்தம் செய்து உர மானியம் ஹெக்டேருக்கு 25,000 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.