அரச உரக் கம்பனியினால் உற்பத்தி செய்யப்படும் ஐந்து வகையான தேயிலை உரங்களின் விலை நான்காயிரம் ரூபாவினால் குறைக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதன்படி அரச உரக் கம்பனி தற்போது தேயிலை உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் வு 200, வு 750, ரு 709, ரு 834, வு 65 ஆகிய ஐந்து வகை உரங்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதுடன், கடந்த வாரத்திலிருந்து இந்த வகை 50 கிலோகிராம் உரத்தின் விலை நான்காயிரம் ரூபாவினால் குறைக்கப்படுவதற்கு விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் அரச உரக் கம்பனி இடையே கடந்த வாரம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இக்கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இவ்வுர மானியத்தை வழங்குவதற்காக 2400 மில்லியன் ரூபா செலவிடப்படுகிறது.
இப்பாரிய நிதியை அரசாங்கத்தினால் வழங்காது, தேயிலைச் செய்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இலங்கை தேயிலைச் சபை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்ததுள்ளடன் , இதற்கான சகல நிதியையும் இலங்கை தேயிலைச் சபையின் நிதி ஒதுக்கீட்டில் இருந்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.
இலங்கையின் தேயிலை உற்பத்தியை அதிகரிப்பதற்காக சகல தேயிலை உற்பத்தியாளர்களுக்கும் உரம் வழங்குவது அத்தியாவசியமானதாகும். ஏனெனில் கடந்த சில வருடங்களாக தேயிலை உற்பத்திக்கு உரம் வழங்காமையினால் தேயிலைக் கொழுந்து அறுவடை வேகமாகக் குறைவடைந்துள்ளது.
தற்போது அவ்வுரம் 5000 மெற்றிக் தொன் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் 10,000 மெற்றிக் தொன் உரத்தை உற்பத்தி செய்வதற்கு அவசியமான உள்ளீடுகள் தற்போது அரச உரக் கம்பனியில் உள்ளதுடன், அங்கு தேயிலைக்கான கலப்பு உரம் 815, 830 மெற்றிக் தொன் காணப்படுகின்றன.