லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த 11ம் தேதி தனது கிராமத்தில் உள்ள வயல்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அண்டை கிராமத்தை சேர்ந்த ஆகாஷ், ராம் ஆகிய இரு இளைஞர்கள் சிறுமிக்கு மது கலந்த குளிர்பானத்தை கொடுத்துள்ளனர். இந்த குளிர்பானத்தை குடித்த சிறுமி மயக்கமடைந்துள்ளார்.
இதை சாதகமாக பயன்படுத்த இளைஞர்கள் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும், இந்த கொடூர செயலை தங்கள் செல்போன்களில் வீடியோவாக எடுத்து அதை சமூகவலைதளத்தில் பதிவேற்றியுள்ளனர்.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தலைமறைவாக உள்ள இளைஞர்கள் ஆகாஷ், ராமை தீவிரமாக தேடி வருகின்றனர்.