செயற்கை நுண்ணறிவு தொடர்பாக இலங்கையின் தேசிய மூலோபாயத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2030 ஆம் ஆண்டாகும் போது இலங்கையை செயற்கை நுண்ணறிவு தொடர்பில் பிராந்தியத்தின் மத்தியநிலையமாக மையப்படுத்துவதற்கும், மற்றும் உலகளாவிய போட்டித்தன்மை மற்றும் பொருளாதாரத்தின் தாங்குதிறனை அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன்மூலம், பேண்தகு பொருளாதார விருத்தியை அடைவதற்கும் மற்றும் வறுமையை ஒழிப்பதற்பதற்காக முக்கிய ஒத்துழைப்பு வழங்கப்படுவதுடன், செயற்கை நுண்ணறிவின் பயன்களை சமூகத்தில் நியாயமாகப் பகிர்ந்தளிப்பதற்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இது தொடர்பாக நேற்று (26) நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:
02. செயற்கை நுண்ணறிவு தொடர்பாக இலங்கையின் தேசிய மூலோபாயத்திட்டம்
இலங்கை தற்போது தனது டிஜிட்டல் நிலைமாற்றத்திற்கான பயணத்தில் குறிப்பிடத்தக்களவு பெறுபேறுகளை அடைந்திருப்பினும், உலகளாவிய செயற்கை நுண்ணறிவு தொடர்பாகக் குறிப்பிடத்தக்களவு தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு இயலுமை கிட்டவில்லை. விவசாயம், சுகாதார சேவைகள் மற்றும் கல்வி போன்ற முக்கிய துறைகளில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதால் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கும், அரச சேவைகளை மேம்படுத்துவதற்கும் இயலுமை காணப்படுகின்றது. அதன்மூலம், பேண்தகு பொருளாதார விருத்தியை அடைவதற்கும் மற்றும் வறுமையை ஒழிப்பதற்பதற்காக முக்கிய ஒத்துழைப்பு வழங்கப்படுவதுடன், செயற்கை நுண்ணறிவின் பயன்களை சமூகத்தில் நியாயமாகப் பகிர்ந்தளிப்பதற்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். செயற்கை நுண்ணறிவு அபிவிருத்தி மற்றும் பயன்பாட்டின் மூலம் டிஜிட்டலால் வலுவூட்டப்பட்ட இலங்கையை உருவாக்குவதற்காக செயற்கை நுண்ணறிவு தொடர்பாக இலங்கையின் தேசிய மூலோபாயத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 2030 ஆம் ஆண்டாகும் போது இலங்கையை செயற்கை நுண்ணறிவு தொடர்பில் பிராந்தியத்தின் மத்தியநிலையமாக மையப்படுத்துவதற்கும், மற்றும் உலகளாவிய போட்டித்தன்மை மற்றும் பொருளாதாரத்தின் தாங்குதிறனை அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. குறித்த நோக்கங்களை அடைவதற்காக தயாரிக்கப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு தொடர்பாக இலங்கையின் தேசிய மூலோபாயத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக தொழிநுட்ப அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.