மூன்று சீன யுத்தக் கப்பல்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்புத் துறைமுகத்திற்கு வருகை

மக்கள் சீன முன்னணிப் படையின் (Chinese People’s Liberation Army Navy) யுத்தக் கப்பல்களான “HE FEI”, “WUZHISHAN” மற்றும் “QILIANSHAN” ஆகிய யுத்தக் கப்பல்கள் மூன்று உத்தியோகபூர்வ சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்டு நேற்று (26) காலை கொழும்புத் துறைமுகத்திற்கு வருகை தந்ததுடன், இலங்கை கடற்படையினால் அக்கப்பல் கடற்படையின் சம்பிரதாய வரவேற்பு வழங்கப்பட்டது.

இவ்வாறு கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்து, Destroyer எனும் வகையைச் சேர்ந்த “HE FEI” யுத்தக் கப்பல், 144.50 மீற்றர் நீளமும் முழுமையாக 267மீற்றர் பரப்புடையதுடன், அக்கப்பலின் கட்டளை அதிகாரியாக கெப்டன் சென் ஜன்பெங் (Chen Junfeng) செயற்படுகிறார். Landing Platform Dock வகையைச் சேர்ந்த “WUZHISHAN” யுத்தக் கப்பல், 210 மீற்றர் நீளமும் முழுமையாக 872 மீற்றர் பரப்புடையதுடன், அக்கப்பலின் கட்டளை அதிகாரியாக கெப்டன் பீ ஸாங்க் (Fei Zhang) செயற்படுகிறார். Landing Platform Dock வகையைச் சேர்ந்த “QILIANSHAN” யுத்தக் கப்பல், 210 மீற்றர் நீளமும் முழுமையாக 334 மீற்றர் பரப்புடையதுடன், இ அக்கப்பலின் கட்டளை அதிகாரியாக கெப்டன் ஸியோங் பிங்கொன் (Xiong Binghon) செயற்படுகிறார்.

இக்கப்பல்கள் மூன்றினதும் கட்டளை அதிகாரிகள் மற்றும் மேற்குக் கடற்படையின் தளபதி ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்கவுடன் உத்தியோகபூர்வ சந்திப்பு, இருநாட்டு கடற்படையினரின் நல்லுறவை மேலும் அதிகரிப்பதற்காக இலங்கைக் கடற்படையினால் ஒழுங்குபடுத்தப்படும் பல நிகழ்ச்சிகளின் அக்கப்பல்களின் சகலரும் பங்குபற்றவுள்ளனர்.

அவ்வாறே, “HE FEI”, “WUZHISHAN” மற்றும் “QILIANSHAN” ஆகிய யுத்தக் கப்பல்கள் மூன்றும் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் அக்கப்பல்களில் பயணிப்பவர்கள் நாட்டின் முக்கிய இடங்களைப் பார்வையிடுவதற்காக அப்பிரதேசங்கள் சிலவற்றுக்கு சுற்றுலா மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், கப்பல்களின் செயற்பாடுகள் தொடர்பாக இலங்கைக் கடற்படையினரைத் தெளிவுபடுத்தும் நிகழ்வு அக்கப்பல்களின் உள்ளேயே இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், மேற்குக் கடல் நிறைவேற்றுக் கடற் பிராந்தியத்தில் இலங்கைக் கடற்படையின் கப்பலுடன் நடைபெறும் பயிற்சிக்குப் பிறகு (Pயுளுளுநுஓ)இ இவ்வுத்தியோகபூர்வ சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து, “HE FEI”, “WUZHISHAN” மற்றும் “QILIANSHAN” ஆகிய யுத்தக்கப்பல்கள் மூன்றும் 2024 ஆகஸ்ட் 29 ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்படுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.