டெல்லி: லடாக் யூனியன் பிரதேசத்தில் மேலும் 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கம் செய்யப்பட்டு இருப்பதாக மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்ட நிலையில், லடாக் யூனியன் பிரதேசமாக மாறியது. அங்கு ஏற்கனவே இரண்டு மாவட்டங்கள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது மேலும் 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு உள்ளது. இதை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, 31 அக்டோபர் 2019 அன்று லடாக் இந்தியாவின் யூனியன் பிரதேசமாக நிறுவப்பட்டது. […]