புதுடெல்லி: ஆல்பபெட்டின் கூகுள் டீப் மைன்ட், மைக்ரோசாப்ட் கார்ப் மற்றும் மெட்டா பிளாட்பார்ம் நிர்வாகிகள் பெங்களூருவில் உள்ள தொழில்நுட்ப நிறுவனமான சர்வம் ஏஐ உடன் இணைந்து புதிய தயாரிப்பை வெளியிட்டனர்.
சர்வம் ஏஐ, என்பது இந்தியாவின் ஓப்பன்ஏஐ என்று அழைக்கப்படுகிறது. இது வணிகங்களுக்கான ஏஐ வாய்ஸ் போட் மென்பொருளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில்,எழுத்துகளை டைப் செய்வதற்கு பதிலாகபேச்சுக் குரலை பயன்படுத்தி வாடிக்கையாளர்களிடம் உரையாடல் நடத்தலாம்.
இந்தியாவின் 10 பூர்வீக மொழிகளின் தரவுகளைக் கொண்டு இந்த தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஏஐ வாய்ஸ் போட் பயன்பாட்டுக்கு நிமிடத்துக்கு ஒருரூபாய் மட்டுமே கட்டண மாக நிர்ணயிக் கப்பட்டுள்ளது. இதற்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.