இறப்பர் உற்பத்திக்கு 4000 ரூபா உர மானியம்

நாட்டின் இறப்பர் உற்பத்தியினால் கிடைக்கப்பெறும் அறுவடையை அதிகரிப்பதற்காக இறப்பர் உற்பத்தியாளர்களுக்கு உர மானியம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

அதன்படி, இறப்பர் உற்பத்திக்காக 50 கிலோ கிராம் உரத்தை 9,500 ரூபாவிலிருந்து 5,500 வரை விலையைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர அரசாங்க உரக் கம்பனியின் தலைவர் கலாநிதி ஜகத் பெரேரா விற்கு ஆலோசனை வழங்கினார்.

இறப்பர் உற்பத்திக்காக வழங்கப்படும் அவ்வுர மானியம் இவ்வாரம் முதல் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது நெல் உற்பத்திக்கு ஒரு ஹெக்டயருக்கு 25,000 ரூபா வீதம் பாரிய உர மானியம் வழங்கப்பட்டுள்ளது. அது தவிர தேயிலை, தென்னை மற்றும் கறுவா போன்ற உற்பத்திகளுக்காக 4000 ரூபா உர மானியம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நாட்டில் இறப்பர் உற்பத்திக்கு பல வருடங்கள் உரம் வழங்கப்படாமையினால் இலங்கை இறப்பர் ஆராய்ச்சி நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட விடயங்களின் படி வருடாந்தம் இறப்பர் பால் உற்பத்தி ஒரு இலட்சம் மெற்றிக் தொன்னிலிருந்து 65,000 மெற்றிக் தொன் வரை குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.