எம்ஜி வின்ட்சர் இவி இன்டீரியர் டீசர் வெளியானது

எம்ஜி மோட்டார் மற்றும் ஜேஎஸ்டபிள்யூ கூட்டணியில் வெளியாக உள்ள முதல் எலெக்ட்ரிக் மாடலான வின்ட்சர் இவி காரில் இடம் பெறப் போகின்ற 15.6 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் பல்வேறு கனெக்ட்டிவிட்டி அம்சங்களை பெறுவது உறுதியாகியுள்ளது.

எம்ஜி காமெட்.இவி, ZS EV என இரு மாடல்களை தொடர்ந்து வர உள்ள வின்ட்சர் மின்சார காரில் இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷன் ஆனது பெற உள்ளது உறுதியாகியுள்ளது இந்த மாடல் ஏற்கனவே சர்வதேச அளவில் கிளவுட் ஈவி என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

5 இருக்கைகளை மட்டும் பெறுகின்ற வின்ட்சர் இவி காரில் தாராளமான இட வசதியுடன் கூடுதலான பூப்ஸ் ஸ்பேஸ் சிறப்பானதாக அமைந்திருக்கும் மேலும் இந்த மாடலில் இடம்பெற்றிருக்கின்ற 15.6 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் கனெக்டேட் கார் டெக்னாலஜி உட்பட ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் உள்ளிட்ட வசதிகளுடன் ஜியோ சாவான் ம்யூசிக் ஆப் ஆகியவற்றை பெற உள்ளது. இந்த டீசர் மூலம் தொடுதிரை அமைப்பிலேயே HVAC, டர்ன் இன்டிகேட்டர் என பல்வேறு கட்டுப்பாடுகளும் இந்த சிஸ்டத்துடன் வழங்கப்பட்டுள்ளது.

ஸ்ட்யரிங் வீல் மூலம் பல்வேறு கட்டுப்பாடுகளும் கொண்ட சுவிட்சுகள் வழங்கப்பட்டது என்றத கூடுதலாக 8.8 அங்குல டிஜிட்டல் கிளஸ்டர் ஆனது கொடுக்கப்பட்டிருக்கின்றது.

குறைந்த திறன் பெற்ற 37.9kwh பேட்டரி பெற்ற மாடல் அதிகமாக 360 கிலோமீட்டர் வரையிலான ரேஞ்ச் வழங்கலாம். அடுத்தபடியாக, டாப் வேரியண்டில் இடம்பெறப் போகின்ற 50.6kWh மாடல் 460 கிலோமீட்டர் வரையிலான ரேஞ்ச் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வருகின்ற செப்டம்பர் 11ஆம் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள இந்த வின்ட்சர் இவி மாடலின் விலை ரூபாய் ₹20 லட்சத்திற்குள் அமையலாம்.

தொடர்புடைய செய்திகள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.