கல்வி முயற்சிகளுக்கு ஆதரவாக இராணுவத் தளபதி கிளிநொச்சியில் சிமிக் பூங்கா திறப்பு

55 வது காலாட் படைப்பிரிவின் முயற்சியான “கிளிநொச்சி சிமிக் பூங்கா”, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களுடன் இணைந்து 25 ஆகஸ்ட் 2024 அன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார். கிளிநொச்சி சமூகத்தின் கல்வித் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும், உள்ளூர் மாணவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அத்தியாவசிய வளங்கள் மற்றும் ஆதரவை வழங்குவதற்கும் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வசதி பூங்காவில் இலவச வைபை, கற்றல் பகுதிகள், கழிவறைகள், சுத்திகரிக்கப்பட்ட நீர் மற்றும் மின்சார வசதிகள் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளதுடன் இவை அனைத்தும் சமூகத்திற்கான கற்றல் சூழலை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.

வருகை தந்த இராணுவ தளபதியை யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ மற்றும் 55 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்கேஎன்சி ஜயவர்தன ஆர்எஸ்பீ என்டிசி அவர்கள் இணைந்து வரவேற்றனர்.

திறப்பினை தொடர்ந்து, இராணுவத் தளபதி மற்ற ஏனைய அழைப்பாளர்களுடன் சேர்ந்து, பூங்காவை பார்வையிட்டதுடன், அங்கிருந்த பிள்ளைகளுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார். இந்த விஜயத்தின் போது, தளபதி மாணவர்களுக்கு பரிசுப் பொதிகளை வழங்கியதுடன், நிகழ்வில் பங்குபற்றிய சிரேஷ்ட அதிகாரிகளுடன் குழு படம் எடுத்துக்கொண்டார்.

இச் சிமிக் பூங்கா திட்டமானது யாழ் பாதுகாப்பு படை தலைமையக தளபதி அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டதுடன் 55 வது காலாட் படைப்பிரிவின் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் 551 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் டிகேசிஎல் பெரேரா ஆர்டப்ளியூபீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்களின் மேற்பார்வையின் கீழ் முடிக்கப்பட்டது. 7 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி, 11 வது பொறியியல் சேவைகள் படையணி மற்றும் 11 வது (தொ) கஜபா படையணி படையினரின் முயற்சிகள் மற்றும் தொழில்நுட்ப உதவியினால் இந்த நிர்மாணம் சாத்தியமானது.

இந் நிகழ்வில் முதலாம் படை தளபதி மேஜர் ஜெனரல் பீஜீபீஎஸ் ரத்நாயக்க ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டிசி, சிரேஷ்ட அதிகாரிகள் அதிகாரிகள்,சிப்பாய்கள்,ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் உள்நாட்டு சமூக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

பின்னர், இராணுவத் தளபதி 1ம் படையினை பார்வையிட்டதுடன் இந்த விஜயத்தின் போது, தளபதி 1ம் படை அதிகாரிகளுடன் குழு படம் எடுத்துக்கொண்டார். குழுவின் முயற்சிகள் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை அங்கிகரித்த அவர் அதிதிகள் பதிவேட்டு புத்தகத்தில் சில பாராட்டுக் கருத்துக்களை பதிவிட்டார். இந்த விஜயத்தை நினைவு கூறும் வகையில் முதலாம் படைத் தளபதி இராணுவத் தளபதிக்கு நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.