மஹிந்திரா நிறுவனத்தின் பிரசித்தி பெற்ற தார் ராக்ஸ் ஐந்து டோர் கொண்ட லைஃப் ஸ்டைல் ஆஃப் ரோடு மாடலின் மைலேஜ் விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் TGDi மற்றும் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் என இரண்டு விதமான எஞ்சின் ஆப்ஷன்கள் பெற்றுள்ளன.
RWD மட்டும் பெற்று வந்துள்ள 175 bhp பவர் மற்றும் 380 NM டார்க் வெளிப்படுத்துகின்ற 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினில் ஆறு வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆனது இடம்பெற்று இருக்கின்றது.
பெட்ரோல் எஞ்சின் பெற்ற தார் ராக்ஸ் ARAI சான்றிதழ் படி ஒரு லிட்டருக்கு 12.4 கிலோ மீட்டர் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்து மஹிந்திராவின் பிரசித்தி பெற்ற M-Hawk 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் RWD. வேரியண்ட் 152 bhp மற்றும் 330 Nm டார்க், 4WD பெறுகின்ற 173 bhp and 370 Nm என இரண்டும் ARAI சான்றிதழ் படி ஒரு லிட்டருக்கு 15.2 கிலோ மீட்டர் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தார் ராக்ஸ் எஸ்யூவி மாடலின் ஆரம்ப விலை ரூபாய் 12.99 லட்சம் முதல் ரூபாய் 20.49 லட்சம் வரை (எக்ஸ்ஷோரூம்) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 4×4 டிரைவ் மாடல்கள் விலை அறிவிக்கப்படவில்லை.