Itel A50… 5000mAh பேட்டரி திறனுடன் 6000 ரூபாயில் அசத்தலான போன்..

Itel A50: மலிவு விலையில் ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்காக, பட்ஜெட் ஸ்மார்போனான  ஐடெல் ஏ50 Itel A50 பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. Itel நிறுவனம் எளிய நடுத்தர மக்களுக்கான நீண்ட கால உழைக்கக் கூடிய பட்ஜெட் போன்களை அறிமுகப்படுத்துவதில் புகழ் பெற்றது. நீங்கள் நம்ப முடியாத விலையில், ரூ.5,999 என்ற விலையில் Itel நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. எளிமையான நேர்த்தியான வடிவமைப்பை கொண்ட Itel A50 பிரீமியம் போனை தோற்றத்தை அளிக்கிறது. பிளாஸ்டிக்  பாடி என்பதால் தொலைபேசியின் எடை குறைவாக உள்ளது, கையாள்வதும் எளிது. பிளாஸ்டிக் பாடியுடன் வந்தாலும் அதன் பூச்சு நன்றாக உள்ளது. பீரிமியம் போன்களில் இருப்பதைப் போல சாதனத்தின் பின்புறத்தில் கைரேகை ஸ்கேனர் உள்ளது.

டிஸ்பிளே மற்றும் செயல் திறன

Itel A50 6.56 இன்ச் HD+ ஐபிஎஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. Itel A50 போன்  1.3 GHz வேகத்தில் இயங்கும் Unisoc T603(12 nm) செயலியைக் கொண்டுள்ளது.  இதுகிறது. ஃபோன் ஆண்ட்ராய்டு 14  என்னும் சமீபத்திய பதிப்பில் இயங்குகிறது என்பதால், நல்ல செயல்திறனை கொண்டுள்ளது இது 2 ஜிபி + 64 ஜிபி ரேம் மற்றும் 4 ஜிபி + 64 ஜிபி ரேம் ஆகிய விருப்பங்களைக் கொண்டுள்ளது. இலகுவான பணிகள் மற்றும் சமூக ஊடக பயன்பாடு, அழைப்பு மற்றும் செய்தி அனுப்புதல் போன்ற அடிப்படை செயலிகளுக்கு இந்த அமைப்பு போதுமானது. ஆனால் அதிக இடம் தேவைப்படும் செயலிகள் அல்லது கேமிங்கிற்கு இந்தச் சாதனம் அவ்வளவு பொருத்தமானதாக இருக்காது

கேமிரா

கேமிராவின் தரம் சராசரியாக, இந்த விலை வரம்பிற்கு ஏற்ற வகையில் உள்ளது. போனின் பின்புறத்தில் 8 எம்பி பிரைமரி கேமராவும், முன்புறத்தில் 5 எம்பி செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.  பகலில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நன்றாகவே இருக்கும். ஆனால் குறைந்த வெளிச்சத்தில்  அவ்வளவு சரியாக புகைப்படங்கள் வருவதில்லை. கேமராவில் HDR, பனோரமா மற்றும் அழகு முறை போன்ற அடிப்படை அம்சங்கள் உள்ளன, இது புகைப்படங்களை சிறிது மேம்படுத்த உதவுகிறது.

பேட்டரி ஆயுள்

Itel A50 ஆனது 5000MAH பேட்டரியைக் கொண்டுள்ளது, இது ஒரு நாள் நீடிக்கும்  திறன் கொண்டது. இந்த ஸ்மார்ட்போனில் 10W வகை C சார்ஜிங் ஆதரவு உள்ளது. அழைப்பது, சமூக ஊடக உலாவுதல் மற்றும் இசையைக் கேட்பது போன்ற சாதாரண பயன்பாட்டிற்கு நீங்கள் இதைப் பயன்படுத்தினால், அது நாள் முழுவதும் நீடிக்கும். ஆனால் அதிக அளவில் பயன்படுத்தினால் பேட்டரி காலியாகலாம். மேலும் ஒரு நாளைக்கு ஒரு முறை சார்ஜ் செய்வது அவசியமாகிறது. .

Itel A50 ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆகும், இது குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் அனுபவத்தை விரும்புபவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. Itel A50 பயன்படுத்த எளிதானது மற்றும் முதல் முறையாக ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு ஏற்றது. இதில் கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை அம்சங்கள், நல்ல பேட்டரி ஆயுள் மற்றும் எளிமையான இடைமுகம் ஆகியவை பட்ஜெட் போனுக்கான நல்ல தேர்வாக இருக்கின்றன. இருப்பினும், செயல்திறன் மற்றும் கேமராவைப் பொறுத்தவரை, இந்த பட்ஜெட் வரம்பிற்கு இது மிகவும் நல்லது. ஒட்டுமொத்தமாக, மலிவான மற்றும் நீடித்த ஸ்மார்ட்போன்களை விரும்புவோருக்கு இந்த போன் சரியான தேர்வாக இருக்கும்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.