இந்தியாவின் 125சிசி சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற ஹீரோ மோட்டார் நிறுவனத்தின் புதிய டெஸ்டினி 125 ஸ்கூட்டர் 2024 ஆம் ஆண்டிற்கான விற்பனைக்கு செப்டம்பர் முதல் வார இறுதியில் வெளியிடப்பட உள்ளது.
2024 ஆம் ஆண்டிற்கான டெஸ்டினி மாடல் முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட டிசைன் மற்றும் நேர்த்தியான ரெட்ரோ அமைப்பினை தொடர்ந்து தக்க வைத்துக்கொண்டு முன்புறத்தில் H ஆங்கில எழுத்தை நினைவுப்படுத்தம் வகையிலான குரோம் பாகங்கள் அல்லது பிரான்ஸ் நிறத்திலான பாகங்களை பெற்றிருக்கும் இரண்டு விதமான வேரியண்டுகள் ஆனது பெற உள்ளது. டிரம் பிரேக் மற்றும் டிஸ்க் பிரேக் என இரு விதமாக வழங்கப்படும்.
கூடுதலாக கனெக்டிவிட்டி சார்ந்த ஹீரோ Xtech அம்சங்களை பெறுகின்ற பெரிய டிஜிட்டல் கிளஸ்டர் பெற்றிருக்கும் மற்றபடி பார்த்தீர்கள் என்றால் இந்த மாடல் வெள்ளை, சிவப்பு, நீலம், கருப்பு, மேக்னெட்டா நீலம் என ஐந்து விதமான நிறங்கள் ஆனது பெற்று இருக்க வாய்ப்புள்ளது.
9 BHP பவர் மற்றும் 10.4 Nm டார்க் வெளிப்படுத்துகின்ற 124.6 cc என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதில் சிவிடி கியர்பாக்ஸ் பெற்றிருக்கும்.
இந்த மாடலுக்கு போட்டியாக ஏற்கனவே சந்தையில் கிடைக்கின்ற சுசுகி ஆக்சஸ் 125, ஹோண்டா ஆக்டிவா 125, டிவிஎஸ் ஜூபிடர் 125, யமஹா நிறுவனத்தின் ஃபேசினோ போன்ற மாடல்கள் எல்லாம் உள்ளன.
வரும் செப்டம்பர் 6ஆம் தேதி விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற இந்த ஸ்கூட்டர் மாடல் விலையில் சிறிய அளவில் மாற்றங்கள் பெற்றிருக்கலாம். மேலும் குறைந்த விலை டெஸ்டினி பிரைம் மாடல் தொடர்ந்து விற்பனை செய்யப்படும் வாய்ப்புகள் உள்ளன.