பசிபிக் பெருங்கடலில் நடந்த இரண்டு வெவ்வேறு சோதனைகளில், போதைப்பொருளைக் கடத்திச் சென்ற படகுகளை மெக்சிகோ கடற்படை துரத்திப் பிடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. இதில், ஒரு சோதனையில் மன்சானிலோ நகரின் தென்மேற்கில் கடலில் போதைப்பொருளைக் கடத்திச் சென்ற படகை மெக்சிகோ கடற்படை அதிகாரிகள் ஹெலிகாப்டரில் துரத்த, ரோந்து கப்பலின் படகுகள் அந்தப் படகை மடக்கிப் பிடித்தது.
அதைத்தொடர்ந்து, படகில் 126 பொதிகளில் இருந்த 5.6 டன் போதைப்பொருள் மற்றும் 1,000 லிட்டருக்கு அதிகமான எரிபொருள் பறிமுதல் செய்த அதிகாரிகள் 15 பேரைக் கைதுசெய்தனர். மேலும், மைக்கோகன் மாகாணத்திலுள்ள கடலோர நகரமான லாசரோ கார்டெனாஸ் அருகே கடலில் நடந்த மற்றொரு சோதனையில், இதேபோல ஹெலிகாப்டர் மற்றும் ரோந்து படகு மூலம் ஒரு படகை அதிகாரிகள் மடக்கிப்பிடித்தனர்.
இதில் 32 பொதிகளில் 1.6 டன் போதைப்பொருளைக் அதிகாரிகள் கைப்பற்றினர். இந்த இரண்டு சோதனையில் மொத்தமாக 7.2 போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு சோதனைகளும் ஆகஸ்ட் 23-ம் தேதி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88