கட்டுமானத் துறையில் வேலைவாய்ப்பிற்காக ஆட்சேர்ப்புச் செய்யும் வேலைத்திட்டம்

IM Japan தொழில்நுட்ப சேவை நிகழ்ச்சித் திட்டத்தின் (TITP) கீழ் கட்டுமானத் துறையில் (ஆண்கள்) (Construction – Male) வேலை வாய்ப்புத் தொடர்பாக தெளிவுபடுத்தும் மற்றும் ஆட்சேர்ப்புச் செய்யும் வேலைத்திட்டம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியத்தில் இடம்பெறவுள்ளது.

அதற்கான தகைமைகளை வைத்திருப்பவர்கள் சம்பந்தப்பட்ட சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் 2024.09.06ஆம் திகதி அன்று காலை 9.00 மணிக்கு இலக்கம் 234, டென்ஸில் கொப்பேகடுவ மாவத்தை, கொஸ்வத்தை, பத்தரமுல்லை முகவரியில் அமைந்துள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பிரதான காரியாலயத்தின் கேட்போர் கூடத்திற்கு சமூகமளிக்குமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்கள் மற்;றும் விண்ணப்பங்களை https://shorturl.at/Q0V78   ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.