பஜாஜ் ஆட்டோ நிறுவனம் சிஎன்ஜி மாடல் அறிமுகத்தை தொடர்ந்து அடுத்ததாக எத்தனால் எரிபொருளில் இயங்கும் வகையிலான மோட்டார் சைக்கிள் மற்றும் மூன்று சக்கர ஆட்டோ ரிக்சா மாடலை அறிமுகம் செய்ய உள்ளதாக ராஜீவ் பஜாஜ் தெரிவித்துள்ளார்.
தற்பொழுது ஃபிரீடம் 125cc CNG பைக் ஆனது கிடைக்கின்றது கூடுதலாக இந்த மாடலில் குறைந்த விலை வேறு என்று ஒன்று விற்பனைக்கு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதுகுறித்து CNBC TV18க்கு அளித்த பேட்டியில் முதல் மாதத்தில் பஜாஜ் சிஎன்ஜி ப்ரீடம் பைக் 1933 எண்ணிக்கை டெலிவரி வழங்கப்பட்டுள்ள நிலையில் வரும் நடப்பு ஆகஸ்ட் மாதத்தில் 8000 யூனிட்டுகளும் விரைவில் படிப்படியாக நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு ஜனவரி 2025-க்குள் மாதம் தோறும் 40,000 யூனிட்டுகள் என்ற இலக்கை நோக்கி இந்நிறுவனம் நகர்ந்து வருவதாக குறிப்பிடுகின்றது.
ஏற்கனவே பல்வேறு நிறுவனங்கள் பாரத் மொபிலிட்டி கண்காட்சியில் எத்தனால் 85% கொண்டு இயங்கும் பைக்குகளை காட்சிப்படுத்தியது மேலும் இதற்கு முன்பாகவே முதன்முறையாக டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் எத்தனால் அப்பாச்சி RTR பைக்கில் கொண்டு வந்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும் இந்த மாடல் சில குறிப்பிட்ட மாநிலங்களில் விற்பனை செய்யப்பட்ட நிலையிலும் தற்பொழுது இந்த மாடலானது விற்பனைக்கு கிடைக்கவில்லை காரணம் போதிய வரவேற்பின்மை ஆகும்.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது எத்தனால் பைக்கானது பல்சர் அடிப்படையில் எத்தனால் 85% எரிபொருள் கொண்டு இயங்கலாம் இது ஏற்கனவே இந்நிறுவனத்தால் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றது. மோட்டார் சைக்கிள் தவிர எத்தனால் கொண்டு இயங்கும் மூன்று சக்கர ஆட்டோ ரிக்சா மாடலையும் இந்நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது.
இந்த இரு மாடல்களும் நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் விற்பனைக்கும் கிடைக்க தொடங்கும் என இந்நிறுவனத்தின் தலைவர் ராஜீவ் பஜாஜ் தெரிவித்துள்ளார்.
மேலும் 2025 ஆம் ஆண்டில் துவக்க மாதங்களில் புதிய சேட்க் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பிளாட்ஃபாரம் அறிமுகம் செய்யப்பட்ட உள்ளது. மேலும் அடுத்த சில வாரங்களுக்கு பிறகு சேட்டை கலெக்டர் ஸ்கூட்டரின் பிரிமியம், அர்பேன் என்ற மாடல்கள் புதிய பெயரில் கூடுதலான ரேஞ்ச் வழங்கும் வகையில் விற்பனைக்கு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.