சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ டி3 புரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த 5ஜி போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம்.
அந்த வகையில் இப்போது இந்தியாவில் டி3 புரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விவோ நிறுவனத்தின் ‘T’ வரிசை போன்கள் இந்திய ஸ்மார்ட்போன் பயனர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் டி3, டி3எக்ஸ் மற்றும் டி3 லைட் மாடல் போன்கள் வெளியாகி இருந்தது.
சிறப்பு அம்சங்கள்
- 6.76 இன்ச் 3டி கர்வ்ட் AMOLED டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 7 ஜெனரேஷன் 3 சிப்செட்
- ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம்
- இரண்டு மேஜர் ஆண்ட்ராய்டு அப்டேட்
- 8ஜிபி ரேம்
- 128ஜிபி மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ்
- 50 மெகாபிக்சல் சோனி IMX882 மெயின் கேமராவுடன் 8 மெகாபிக்சல் அல்ட்ரா வொய்ட் கேமராவும் பின்பக்கம் இடம்பெற்றுள்ளது
- 16 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
- 4கே வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட்டை இந்த போன் கொண்டுள்ளது
- 5,500mAh பேட்டரி
- 80 வாட்ஸ் சார்ஜர் இந்த போனுடன் கிடைக்கிறது
- ட்யூயல் நேனோ சிம்
- யுஎஸ்பி டைப்-சி 2.0
- 5ஜி நெட்வொர்க்
- ஆரஞ்சு மற்றும் பச்சை நிறத்தில் இந்த போன் வெளிவந்துள்ளது
- இந்த போனின் விலை ரூ.24,999 முதல் ஆரம்பமாகிறது
- செப்டம்பர் 3 முதல் விற்பனை தொடங்குகிறது