கேரள சினிமாவை அதிர வைத்துள்ள பாலியல் புகார்கள் குறித்து நடிகர் விஷால் பேசியிருக்கிறார்.
நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளரும், நடிகருமான விஷால் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு செய்தியாளர்களை சந்தித்த விஷாலிடம், கேரள சினிமாவை அதிர வைத்துள்ள பாலியல் புகார்கள் குறித்த கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், ” 20% தான் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. மற்றவர்கள் வாய்ப்பு கிடைக்காமல் நிறைய அலுவலகங்களில் ஏமாற்றம் அடைகிறார்கள்.
எந்த கம்பெனிக்கு செல்கிறார்கள் அவர்கள் சொல்வது உண்மையா? திரைப்படம் எடுக்கிறவர்களா தானா என்பது குறித்து சுதாரிப்பு கொள்ள வேண்டும். ஹேமா கமிஷன் போன்று தமிழ் திரைப்பட சங்கம் சார்பிலும், தமிழ் திரைப்பட உலகில் 10 பேர் கொண்ட ஒரு குழு அமைக்க நடிகர் சங்கம் சார்பில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. விரைவில் அமைக்கப்படும். நடிகர் சங்கம் ஆண்களுக்கு மட்டும் அல்ல, பெண்களுக்கும்தான்.
யாரோ ஒருவர் தவறாக ஒரு பெண்ணை பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்வார்கள். ஒரு விஷயம் என்னவென்றால் அந்த பெண்ணுக்கு தைரியம் வேண்டும். அப்படி கேட்கிறவர்களை பெண்கள் யாராக இருந்தாலும் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். பெண்களை இதுபோன்று பயன்படுத்த நினைப்பவர்களுக்கு தண்டனை கிடைத்தாக வேண்டும். தமிழ் சினிமாவிலும் காலகாலமாக குற்றச்சாட்டுகள் இருந்துகொண்டுதான் இருக்கிறது. இங்கும் அது போல் பிரச்னைகள் இருக்கலாம்.
உப்மா கம்பெனிகள் ஒரு ஆபிஸ் போட்டு போட்டோ ஷூட் எடுத்து பெண்களை பயன்படுத்தி கொள்கிறார்கள். அதை நான் மறுக்கவில்லை. தமிழ் திரையுலகில் இப்படி இருப்பதை கண்டுபிடிக்க நாங்கள் போலீஸ் இல்லை. நடிகைகள் யாராவது தங்களிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் கொடுத்தால் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்” என்று கூறியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88