சென்னை: நடிகர் விஜய்யின் 68வது படமாக உருவாகியுள்ள கோட் படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. விஜய் படங்களின் ரிலீசை அவரது ரசிகர்கள் திருவிழாவாக திரையரங்குகளில் கொண்டாடுவார்கள். அதேபோல இந்தப் படத்தின் ரிலீசையும் கொண்டாட காத்திருக்கின்றனர். கோட் படத்துடன் தளபதி 69 படத்தையும் நடித்து முடித்துவிட்டு சினிமாவில் இருந்து விலக உள்ளதாக விஜய் முடிவெடுத்துள்ளார்.
