கொல்கத்தா டாக்டர் கொலை டு ஆந்திரா மாணவிகள் வீடியோ… பெண்கள் பாதுகாப்பில் இந்தியாவுக்கு எந்த இடம்?!

‘பாலியல் வன்முறை’, ‘பாலியல் தொல்லை’ – இந்த வார்த்தைகள் கடந்த சில தினங்களாக அதிகம் கேட்கப்படுகிறது…அதிகம் பேசப்படுகிறது. கடந்த சில தினங்களாகத் தானா? என்றால் ‘நிச்சயம் இல்லை’. அன்றாடம் இந்த வார்த்தைகள் ஒலித்துக்கொண்டிருந்தாலும், கடந்த சில தினங்களாக பேசுப்பொருளாக இருந்துக்கொண்டே இருக்கிறது.

இதற்கு கொல்கத்தா மருத்துவ மாணவியின் மரணம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் தொல்லை, மலையாள திரையுலகில் வெளியான ஹேமா கமிட்டி அறிக்கை, திருச்சி என்.ஐ.டி-யில் மாணவி கொடுத்த பாலியல் புகார் ஆகியவை தான் முக்கிய காரணம்.

இந்தியாவுக்கு பெண்கள் பாதுகாப்பில் எந்த இடம்?!

இந்த புகார்களுடன் இன்று பரபரப்பை ஏற்படுத்தி வருகிற ஆந்திரா என்ஜினியரிங் காலேஜ் விவகாரமும் சேர்ந்துள்ளது. ஆந்திராவில் உள்ள தனியார் என்ஜினியரிங் காலேஜில் பெண்கள் கழிப்பறையில் கேமரா வைத்து, அந்த வீடியோக்களை ஆண்கள் ஹாஸ்டலில் பகிரப்பட்டுள்ளது. ‘அப்படி எந்த கேமராவும் இல்லை’ என்று போலீசார் கூறுவது அங்கே போராட்டம் நடத்தி வரும் மாணவர்களை இன்னும் தூண்டியுள்ளது.

இந்த நேரத்தில் ‘பெண்கள் பாதுகாப்பில்’ இந்தியாவுக்கு எந்த இடம் என்று பார்ப்பது அவசியமாகிறது. கடந்த மார்ச் மாதம் ஜார்ஜ்டவுண் நிறுவனம் (Georgetown Institure for Women, Peace and Security) வெளியிட்ட அறிக்கையின் படி, பெண்களுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் இந்தியா 177 இடங்களில் 128-வது இடத்தைப் பிடித்துள்ளது.

128-வது இடம் என்பது நிச்சயம் பெருமைக்குரிய விஷயமல்ல.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.