ஆகஸ்ட் 26 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு தீவு வந்த சீன இராணுவத்தின் HE FEI”, “WUZHISHAN” மற்றும் “QILIANSHAN” என்ற மூன்று போர்க்கப்பல்கள் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளன.
சீன இராணுவத்தின் போர்க்கப்பல்களின் முப்படையின் கட்டளை அதிகாரிகள் மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் உள்ள மேற்கு கடற்படைப் பகுதி தளபதி ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்கவை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.
இரு கடற்படையினருக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்தும் வகையில், இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தொடர் நிகழ்ச்சிகளில் இந்தக் கப்பல்களின் பணியாளர்கள் பங்கேற்றனர்.
உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு, சீன இராணுவத்தின் போர்க்கப்பல்கள் கொழும்பு கடற்கரையில் இலங்கை கடற்படைக் கப்பலுடன் கடவுப் பயிற்சிக்குப் ( PASSEX ) பின்னர் நேற்று இலங்கையிலிருந்து புறப்படமை குறிப்பிடத்தக்கது.