சென்னை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை பற்றி சர்ச்சைக்குரிய வார்த்தையை பயன்படுத்தியதாக சீமான் மீது வழக்கு பதிய உத்தரவிடப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த விக்கரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போர்ஹு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியி விமர்சிப்பதற்காக சண்டாளன் என்ற வார்த்தையை பேசியதாக கூறப்படுகிறது. சண்டாளன் என்பது ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் ஜாதிப் பெயர் ஆகும். எனவே வேறு ஒரு சமூக பெயரைச் […]