பிக்பாஸ் சீசன் 8-க்கான ப்ரோமோ இந்த வார இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘புதுச்சேரியில் ஷூட்டிங் முடிந்து விட்டது’ என்று ஒரு சாராரும் ‘இன்னும் கொஞ்சம் மிச்சமிருக்கிறது, அதைச் சென்னையில் ஷூட் செய்ய இருக்கிறார்கள்’ என இன்னொரு தரப்பினரும் தெரிவிக்கின்றனர்.
இந்தச் சூழலில் பிக்பாஸ் சீசன் 8 ல் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் என ஏகப்பட்ட பெயர்கள் சமூக வலைதளங்களில் நாள்தோறும் வரிசை கட்டி வருகின்றன. ‘பாரதி கண்ணம்மா’ அருண் உள்ளிட்ட சிலர் பெயர்களை விகடன் தளத்திலும் வெளியிட்டிருந்தோம்.
தற்போது ‘இந்த வருடம் பிக்பாஸ் செல்கிறார்’ என பலமாக அடிபடும் இன்னொருவர் குறித்து நம்பகமான சோர்ஸ் மூலம் நமக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. அவர் வேறு யாருமல்ல., பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொடர்ந்து ரிவியூ செய்து வரும் தயாரிப்பாளரும் நடிகை மகாலட்சுமியின் கணவருமான ரவீந்தர் சந்திரசேகரன் தான் அவர் என்கிறார்கள். சேனலின் பிக் பாஸ் 8-க்கான உத்தேச போட்டியாளர் பட்டியலில் இவரது பெயரும் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
ரவீந்திரைப் பொறுத்தவரை ஒவ்வொரு வருடமும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதுமே தன் ரிவியூவைத் தொடங்கி விடுவார். போட்டியாளர்கள் ஒவ்வொருவரின் ப்ளஸ் மைனஸ் குறித்து இவர் வைக்கும் கமென்ட்டுகள் சமயங்களில் பெரிய சண்டையையே உண்டாக்கியதெல்லாம் நடந்திருக்கிறது.
அனிதா சம்பத் கலந்து கொண்ட சீசனில் அவருடன் இவர் ட்விட்டர் தளத்தில் மல்லுக்கு நின்றதை எல்லோரும் அறிவர்.
இன்னொருபுறம் தனிப்பட்ட முறையிலும் பண மோசடிப் புகார், கைது, சிறைவாசம் என அவ்வப்போது மீடியாவில் இவரின் பெயர் அடிபட்டுக் கொண்டே இருக்கும். நடிகை மகாலட்சுமியை இவர் திடீர் திருமணம் செய்தது, தொடர்ந்து இருவரும் சேர்ந்து அளித்த பேட்டிகள் வைரலானது என இவர் குறித்துச் சொல்லிக் கொண்டே போகலாம். ‘அண்ணன் தயாராதான் இருக்கார்’ எனகின்றனர் அவருக்கு நெருக்கமான சிலர்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88