விஜய் நடித்திருக்கும் ‘தி கிரேடஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ திரைப்படம் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது.
இறுதிகட்ட பணிகள் அனைத்தும் முடித்துவிட்டு படத்தின் ப்ரொமோஷனுக்காகப் பல்வேறு பகுதிகளில் பிஸியாக இருக்கிறார், இயக்குநர் வெங்கட் பிரபு. முக்கியமான ஃபைனல் மிக்ஸிங் வேலைகளும் முடிவடைந்துவிட்டதாக இயக்குநர் வெங்கட் பிரபு அப்டேட் கொடுத்திருக்கிறார். இதுமட்டுமன்றி அவருடைய எக்ஸ் வலைதளப் பக்கத்தில் எப்போதும் பயங்கர ஆக்டிவாக இருந்து வருகிறார். அதில் ‘தி கோட்’ திரைப்படம் தொடர்பான ரசிகர்களின் அனைத்து கேள்விகளுக்கும் ஜாலி மோடில் பதிலளித்து வருகிறார்.

எப்போதும் விஜய் நடிக்கும் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு அதிகப்படியான எதிர்பார்ப்பு நிலவும். அதுபோல இப்படத்தின் இசை வெளியீட்டு விழா தொடர்பாக பல தகவல்கள் சமூக வலைதளப் பக்கங்களில் பேசப்பட்டன. ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு செப்டம்பர் 23-ம் தேதி நடக்கவிருப்பதால் அதற்கான வேலைகளில் பிஸியாக இருக்கிறாராம் விஜய்.
யுவன் ஷங்கர் இசையமைத்துள்ள இப்படத்தின் மூன்று பாடல்கள் ஏற்கெனவே வெளியாகின. இத்திரைப்படத்தின் நான்காவது பாடல் நாளைய தினம் வெளியாகிறது என்ற தகவலை அதிகாரபூர்வமாக வெளியிட்டிருந்தது படக்குழு. இப்பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியிருக்கிறார். இவர் இதற்கு முன்பே விஜய்க்கு பல ஹிட் பாடல்களை எழுதியிருக்கிறார். விஜய்யின் கட்சி பாடலை எழுதியதும் இவர்தான். இவர் எழுதியிருக்கிற இப்படத்தின் பாடல் நாளை மாலை வெளியாகவிருக்கிறது.
Super thrilled to work with one of my most fav @vp_offl sir and the man who created his own destiny legendary @thisisysr sir
Lyrically, song is not in Full Mass space. But who cares. Thalapathy is going to elevate it Vp-U1
Just like old times, couple of lines for you soon
— Vivek (@Lyricist_Vivek) August 30, 2024
இந்த பாடல் தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாடலாசிரியர் விவேக், ” என்னுடைய ஃபேவரைட் வெங்கட் பிரபு மற்றும் லெஜெண்ட் யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்து பணியாற்றியதில் மிக்க மகிழ்ச்சி. இந்தப் பாடலின் வரிகள் முழுவதும் மாஸாக இருக்காது. ஆனால், தளபதி விஜய் இந்தப் பாடலை மாஸாக தரம் உயர்த்தப் போகிறார்! இந்தப் பாடலின் இரண்டு வரிகளை விரைவில் பதிவிடுகிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.