கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (CCPI, 2021=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2024 யூலை மாதம் 2.4 சதவீதத்திலிருந்து 2024 ஓகஸ்ட் மாதம் 0.5 சதவீதத்திற்கு சடுதியாக குறைவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
முதன்மைப் பணவீக்கத்தில் ஏற்பட்ட இவ்வீழ்ச்சியானது பரந்தளவில் இலங்கை மத்திய வங்கியின் எறிவுகளுக்கு இசைவாகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக இலங்கை மத்திய வங்கியினால் நேற்று (30) வெளியிட்டப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு: