மும்பை தாராவியில் உள்ள ஆயிரக்கணக்கான குடிசைகளை அகற்றிவிட்டு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள் கட்டும் திட்டம் 15 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்து வந்த நிலையில், அத்திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பை அதானி நிறுவனத்திடம் மாநில அரசு ஒப்படைத்தது.
தற்போது அதானி நிறுவனம் தாராவியில் உள்ள குடிசைகளை கணக்கெடுக்கும் பணியை தொடங்கி முழுவேகத்தில் நடத்தி வருகிறது. மாநில அரசுடன் அதானி நிறுவனம் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின் படி தாராவியில் வசிக்கும் மக்களுக்கு அதாவது 2000-வது ஆண்டு ஜனவரி 1-ம் தேதிக்கு முன்பு கட்டப்பட்ட குடிசைவாசிகளுக்கு தாராவியில் 350 சதுர அடி மாற்று வீடு இலவசமாக கொடுக்கப்படும். 2000-11ம் ஆண்டு வரை குடிசைகள் கட்டியவர்கள் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 2.5 லட்சத்தில் வீடு ஒதுக்கப்படும்.
2011ம் ஆண்டுக்கு பிறகு கட்டப்பட்ட குடிசைகளுக்கும், மாடிகளுக்கும் வாடகை வீடு திட்டத்தில் தாராவிக்கு வெளியில் வீடு ஒதுக்கப்படும்.
இத்திட்டத்தில் வீடு கிடைப்பவர்கள் குறிப்பிட்ட ஆண்டுக்கு அரசு மற்றும் அதானி நிறுவனம் நிர்ணயிக்கும் தொகையை வாடகையாக செலுத்தவேண்டும். இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்காக அதானி நிறுவனம் மாநில அரசுடன் இணைந்து கூட்டு நிறுவனம் ஒன்றை தொடங்கி இருக்கிறது. அந்நிறுவனத்தின் நிர்வாக அதிகாரியாக ஸ்ரீனிவாஸ் செயல்பட்டு வருகிறார்.
இத்திட்டத்தில் வீடு கிடைப்பவர்கள் குறிப்பிட்ட ஆண்டுக்கு அரசு மற்றும் அதானி நிறுவனம் நிர்ணயிக்கும் தொகையை வாடகையாக செலுத்தவேண்டும். இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்காக அதானி நிறுவனம் மாநில அரசுடன் இணைந்து கூட்டு நிறுவனம் ஒன்றை தொடங்கி இருக்கிறது. அந்நிறுவனத்தின் நிர்வாக அதிகாரியாக ஸ்ரீனிவாஸ் செயல்பட்டு வருகிறார். இத்திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஸ்ரீனிவாஸ் அளித்த பேட்டியில், ”தாராவி மக்களுக்கு வீடு கட்ட ரயில்வேயிடமிருந்து 27 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டுள்ளது. அந்த நிலத்திற்காக ரயில்வேயிக்கு 1000 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. குடிசைகளை கணக்கெடுக்க கணிசமான அளவு பணம் செலவு செய்யப்பட்டு வருகிறது. இக்கணக்கெடுப்பு பணி வரும் மார்ச் மாதம் முடிவடையும். ரயில்வேயிடமிருந்து வாங்கப்பட்டுள்ள நிலத்தில் அடுத்த 4 – 6 மாதத்தில் கட்டுமானப்பணி தொடங்கும். இரண்டு முதல் இரண்டரை ஆண்டில் 15 முதல் 20 ஆயிரம் வீடுகள் கட்டப்படும். 8 முதல் 10 கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டுவிட்டால் அந்த வீட்டிற்கு தாராவி மக்கள் இடமாற்றம் செய்யப்படுவார்கள். இது தவிர இத்திட்டத்திற்காக 100 பேர் வேலைக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சம்பளம் கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் மாநில அரசிடம் வாங்கிய 500 கோடியை அதானி நிறுவனம் திரும்ப கொடுத்திருக்கிறது.
அதானி நிறுவனம் இதுவரை இத்திட்டத்திற்கு ரூ.2000 கோடி செலவு செய்திருக்கிறது. எனது 34 ஆண்டு அரசு பணியில் இதுவே மிகவும் சவாலானது. அதுவும் மிகவும் மக்கள் நெருக்கடி அதிகமான மற்றும் உயரமான கட்டிடங்கள் கட்டுவதற்கு கட்டுப்பாடுகள் இருக்கும் இடத்தில் இதனை அமல்படுத்துவது சவாலானது. குடியிருப்புக்களோடு சேர்ந்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இருக்கிறது. அதோடு கடற்கரையோர ஒழுங்குமுறை ஆணைய கட்டுப்பாடுகளும் இருக்கிறது. இத்திட்டத்தை 7 ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயித்து இருக்கிறோம். இத்திட்டத்தில் இலவச வீடு பெற தகுதியில்லாதவர்களுக்கு மாற்று வீடு கொடுக்க நிலம் வாங்குவதில் சிக்கல் இருந்து வருகிறது. நாங்கள் பல அரசு நிறுவனங்களுடன் பேசி வருகிறோம். ஆனால் அவர்கள் நிலம் கொடுக்க மறுத்து வருகின்றனர்”என்றார்.
தாராவியில் வசிக்கும் குடிசைவாசிகளை அரசு புறநகரில் உள்ள குர்லா, முலுண்ட், பாண்டூப் பகுதிகளுக்கு மாற்ற திட்டமிட்டப்பட்டது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தாராவி மக்களை தங்களது பகுதியில் குடியமர்த்தினால், தங்களது பகுதியில் கூட்ட நெரிசல் போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்படும் என்று கூறி அவர்கள் போராடி வருகின்றனர். தாராவியில் சிலர் ஒரே வீட்டில் இரண்டு அல்லது மூன்று மாடி வரை கட்டி இருக்கின்றனர். அவர்களது வீட்டின் கீழ் தளத்திற்கு இலவச வீடு கொடுக்கப்படும். மேலே எத்தனை வீடுகள் இருந்தாலும் ஒரு வீடு மட்டும் வாடகை வீடு திட்டத்தில் ஒதுக்கப்படும் என்று அதானி நிறுவனம் தெரிவித்துள்ளது.