ஐதராபாத்: தெலுங்கு திரையுலகில் நடக்கும் பாலியல் தொல்லை தொடர்பாக விசாரணை அறிக்கை வெளியிடுமாறு மாநில அரசை நடிகை சமந்தா வலியுறுத்தி உள்ளார். கேரளாவில் சலசலப்பை ஏற்படுத்தி வரும் திரைதுரையினரின் பாலியல் விவகாரம் மற்ற மாநிலங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு, ஆந்திரா, மேற்குவங்கம் என பல மாநிலங்களிலும் திரையுலக பாலியல் தொடர்பான அதிர்ச்சிதரும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், தெலுங்கு திரையுலகில் நடக்கும் பாலியல் தொல்லை தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை வெளியிடுமாறு அரசுக்கு […]