தேனி: 20 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த மூலிகை மருத்துவமனை… `போலி மருத்துவர்’ என சிக்கிய நிறுவனர்!

தேனி அருகே நாகலாபுரத்தில் மதுமதி மூலிகை மற்றும் யோகா மருத்துவமனை கடந்த 20 ஆண்டுகளுக்கு செயல்பட்டு வருகிறது. பிரமாண்ட கட்டடத்தில் இயங்கி வரும் இந்த மருத்துவமனையில் மண் குளியல், நீராவி குளியல், மசாஜ் போன்றவைகள் இருப்பதனால் தேனியில் உள்ள முக்கியஸ்தர்கள், தொழில் அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் இந்த மூலிகை மருத்துவமனைக்கு அடிக்கடி வருவது வழக்கம்.

மூலிகை மருத்துவம்!

இந்நிலையில் பெரியகுளத்தைச் சேர்ந்த சிவகுமார் என்பவர் தனது மனைவி ராஜேஸ்வரிக்கு உடல்நலம் குறைவு காரணமாக இந்த மூலிகை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். உடல்நலம் மோசமடைந்ததை தொடர்ந்து தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த ஜனவரி மாதம் உயிரிழந்தார்.

அதனைத்தொடர்ந்து சிவகுமார் சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் தனியார் மூலிகை மற்றும் யோகா மருத்துவமனையில் தவறான சிகிச்சை வழங்கியதன் காரணமாகவே தனது மனைவி இறந்துவிட்டதாக வழக்கு தொடர்ந்தார். வழக்கின் அடிப்படையில் மூலிகை மருத்துவமனை நிறுவனர் ராமசாமி முறையாக சித்த மருத்துவம் பயின்றுள்ளாரா என அவரின் சான்றிதழை வைத்து முதற்கட்ட விசாரணை துவங்கியது.

கைதான ராமசாமி

விசாரணையில் மூலிகை மருத்துவனை நிறுவனர் ராமசாமியின் சித்த மருத்துவ சான்றிதழ் போலி என்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நல இணை இயக்குநர் ரமேஷ் பாபு பழனிச்செட்டிபட்டி போலீஸாரிடம் புகார் அளித்தார். அதனடிப்படையில் போலி சித்த மருத்துவ சான்றிதழ் வைத்து மருத்துவம் பார்த்த மருத்துவமனை நிறுவனர் ராமசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை அரசு மருத்துமனைக்கு மாற்றப்பட்ட பின்னர், மருத்துவமனைக்கு சீல் வைக்கும் நடவடிக்கை எடுக்க உள்ளனர்.

கைது

போலி சித்த மருத்துவ சான்றிதழ் பெற்று இருபது ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த தனியார் மூலிகை மற்றும் யோகா மருத்துவமனை நிறுவனர் கைது செய்யப்பட்ட சம்பவம் தேனி மக்களிடையே பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.