மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க-வினர் கள்ள ஓட்டுப்போட்டனர் என்று காங்கிரஸ் கட்சி புகார் கூறியது. ஆனால் அது தேர்தல் கமிஷன் காதுக்கு எட்டவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. தற்போது அதனை நிரூபிக்கும் ஒரு வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி இருக்கிறது. மத்திய பிரதேச மாநிலம் சாகர் மக்களவை தொகுதி பா.ஜ.க எம்.பி. லதா வாங்கடே அங்குள்ள விடிஷா அருகில் உள்ள லதேரி என்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார்.
அவரை பா.ஜ.க தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர். பா.ஜ.க தொண்டர்கள் எம்.பி.யை சூழ்ந்து கொண்டு பேசினர். அதில் ஷிரோனி பா.ஜ.க எம்.எல்.ஏ.உமா காந்த்தின் பிரதிநிதி ஒருவர், `மேடம் நாங்கள் காங்கிரஸ் பூத் ஏஜெண்ட் யாரையும் 13 வாக்குச்சாவடிக்குள் விட வில்லை’ என்று தெரிவித்தார்.
அருகில் நின்ற பா.ஜ.க கவுன்சிலரின் கணவர் மகேஷ் என்பவர், `நான் மட்டும் 15 ஓட்டுப்போட்டேன்’ என்று தெரிவித்தார். அனைவர் முன்னிலையில் கள்ள ஓட்டுப்போட்டேன் என்று கூறியதை கேட்ட பா.ஜ.க எம்.பி. என்ன சொல்வது என்று தெரியாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.
ஆனால் வெளிப்படையாக பா.ஜ.க-வினர் கள்ள ஓட்டுப்போட்டு இருப்பதை ஒப்புக்கொண்டிருப்பதால் சாகர் தொகுதி தேர்தல் வெற்றியை ரத்து செய்ய வேண்டும் என்று தேர்தல் கமிஷனில் புகார் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. எப்படி தில்லு முல்லு செய்து தேர்தலில் வெற்றி பெற்றோம் என்பதை பா.ஜ.க பிரமுகர்கள் எம்.பி.யிடம் சொல்வது போன்ற வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக பரவி இருக்கிறது. இதனால் லதா வான்கடேவுக்கு தர்ம சங்கடமான சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. இந்த வீடியோ ஆதாரத்துடன் தேர்தல் கமிஷனில் முறையிடப்போவதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88