புதுடெல்லி: வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா தொடர்பாக அனைத்து தரப்பினரும் தங்களது ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை தெரிவிக்கலாம் என வக்பு வாரிய சட்ட திருத்த மசோதவை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக்குழு அழைப்பு விடுத் துள்ளது.
வக்பு வாரிய சொத்துக்களை இணையதளம் மூலமாக பதிவுசெய்து சீர்திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முயற்சி மேற்கொண்டது. இதற்காக வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா மக்களவையில் கடந்த 8-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.
இதில் மத்திய வக்பு கவுன்சில் அமைக்கப்படும் எனவும், மாநில வக்பு வாரியத்தில் முஸ்லிம் பெண்கள், முஸ்லிம் மதத்தை சேராத பிரதிநிதிகள் இடம் பெறுவர் என தெரிவிக்கப்பட்டது. மேலும், ஒரு சொத்தை வக்பு வாரிய நிலமா அல்லது அரசு நிலமா என்பதை மாவட்ட ஆட்சியர் தீர்மானிப்பார் எனவும் சட்டதிருத்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும்எதிர்ப்பு தெரிவித்தன. இது முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கை என்றும், அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதல் என்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குற்றம் சாட்டினர். இதையடுத்து இந்தசட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் கூட்டுக் குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது.
பாஜக எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை ஆய்வு செய்ய நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. இதன் முதல் கூட்டம் ஏற்கனவே நடந்து முடிந்த நிலையில், இரண்டாவது கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது.
இதில் மும்பையைச் சேர்ந்த அகில இந்திய சன்னி ஜமியதுல் உலாமா அமைப்பு, டெல்லியில் உள்ள சிவில் உரிமைகளுக்கான இந்திய முஸ்லிம்கள் (ஐசிஎம்ஆர்) அமைப்பு ஆகியவை தங்களது கருத்துக்களை தெரிவித்தன.
இந்நிலையில் மக்களவை செயலாளர் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா தொடர்பாக பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள், நிபுணர் கள், அமைப்புகள் தங்களது கருத்துக்கள், ஆலோசனைகளை தெரிவிக்கலாம் என பாஜக எம்.பி ஜெகதாம்பிகா பால்தலை மையிலான நாடாளுமன்ற கூட்டுக் குழு கேட்டுக் கொண்டுள்ளது.
அதனால் அனைத்து தரப்பின ரும் தங்களது கருத்துக்களை இந்தக் குழுவிடம் 15 நாட்களுக்குள் தாக்கல் செய்யலாம். எழுத்துபூர் வமாக கருத்துக்களை தாக்கல் செய்வதுடன், குழு முன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க விரும்புவோரும், தங்கள் விருப்பத்தை கடிதம் மூலம் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.