ராயல் என்ஃபீல்டின் புதிய கிளாசிக் 350 விலை நாளை அறிவிக்கப்படும்

ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் பிரபலமான கிளாசிக் 350 மாடலின் விலை நாளை அறிவிக்கப்பட உள்ளது 2024 ஆம் ஆண்டிற்கான மாடல் பல்வேறு மாறுதல் செய்யப்பட்டு நிறங்கள் உட்பட கூடுதலான வசதிகள் பெற்று இருக்கின்றது.

எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி பைலட் விளக்கு, கிளஸ்டரில் கியர் பொசிஷன் இண்டிகேட்டர் மற்றும் டைப்-சி யூஎஸ்பி சார்ஜிங் போர்ட் ஆகியவற்றை புதிய கிளாசிக் 350 மாடலில் ஹெரிட்டேஜ் வகையில் மெட்ராஸ் ரெட், ஜோத்பூர் ப்ளூ என இரண்டு நிறங்கள், ஹெரிட்டேஜ் பிரீமியம் வகையில் மேடாலின் பிரான்ஸ், சிக்னல்ஸ் வேறுபாடில் கமாண்டோ சேன்ட், டார்க் வகையில் கன் கிரே, ஸ்டெல்த் பிளாக் மற்றும் ரீகல் க்ரீன் என்ற நிறத்தில் எமரால்ட் என ஐந்து வேறுபாடுகளில் மொத்தம் 7 நிறங்கள் கிடைக்கும்.

டார்க் சீரிஸ் தவிர, எமரால்டு வகையிலும் டிரிப்பர் பாட் உடன் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய லீவர் மற்றும் எல்இடி இன்டிகேட்டர்கள் உள்ளது.

குறிப்பாக முந்தைய நிறங்களில் இருந்து மாறுபடும் ஆனால் சில நிறங்களை அடிப்படையில் முந்தைய நிறங்களிலிருந்து தழுவியதாக அமைந்திருந்தாலும் சில டிசைன் மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக இந்த முறையை இந்நிறுவனம் கிளாசிக் 350 பைக்கிற்கு சிறப்பு ஃபேக்டரி கஸ்டம் என்ற ஆப்ஷனை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் நமக்கு விருப்பமான ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிளை விருப்பம் போல கஸ்டம் செய்து கொள்ளும் வசதியானது ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் எவ்விதமான வாரண்டி பாதிப்பு இல்லாமல் தங்களது கஸ்டமைஸ்டு கிளாசிக் பைக்குகளை பெற்றுக் கொள்ளலாம்.

நாளை விலை அறிவிக்கப்பட்ட உடனே முன்பதிவும் தொடங்கப்படுகின்றது. மேலும் டெஸ்ட் டிரைவ் மாடல்கள் அனைத்து ராயல் என்ஃபீல்டு டீலர்களிலுடமும் கிடைக்கத் தொடங்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது

2024 கிளாசிக் 350 பைக்கின் 7 நிறங்களின் புகைப்படம்

தொடர்புடைய செய்திகள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.