காஞ்சிபுரம் மாவட்டம், முட்டவாக்கம் காலனியைச் சேர்ந்த பூங்காவனம் என்பவரின் 22 வயது மகன் அஜித்குமார். கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை 13-ம் தேதி, ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி காவல் நிலைய எல்லைக்குஉட்பட்ட கீழ்வெண்பாக்கம் – வதியூர் சாலையில் அஜித்குமார் கொல்லப்பட்டுக் கிடந்தார். இந்த கொலையில் தொடர்புடையதாக முட்டவாக்கம் காலனிக்கு அருகேயுள்ள வத்தியூரைச் சேர்ந்த திருநாவுக்கரசு, சந்தானம், சர்மாமூர்த்தி, சிவா, ராஜசேகர், பரசுராமன், அஜித் என 7 இளைஞர்களை கைதுசெய்த நெமிலி போலீஸார், இவர்கள்மீது கொலை மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்தனர்.
தங்களது நண்பனின் கொலைக்கு பழிக்குத் தீர்க்கும் வகையில், அஜித்குமாரை வெட்டிக் கொன்றதும் விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கு விசாரணை வேலூரில் உள்ள தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த நிலையில், நேற்றைய தினம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி சாந்தி தீர்ப்பு வழங்கினார். குற்றவாளிகள் 7 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து, கொலையாளிகள் 7 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேலூர் மத்திய சிறைக்கு அழைத்துசெல்லப்பட்டு அடைக்கப்பட்டனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88