Chennai F4: 'போட்டிகள் ஒத்திவைப்பு; அனுமதி + வார்னிங் கொடுத்த FIA' – முதல் நாளில் என்ன நடந்தது?!

சென்னையின் இரவு நேர வீதி கார் பந்தயத்தின் முதல் நாள் எந்த பெரிய சுவாரஸ்யமும் இல்லாமல் முடிந்திருக்கிறது. முதல் நாளில் போட்டிகள் நடைபெறாத நிலையில் வீரர்கள் பயிற்சியில் மட்டுமே ஈடுபட்டிருந்தனர். முதல் நாளில் என்னவெல்லாம் நடந்தது என்பதைப் பார்க்கலாம்..!

Race

இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்களுக்கு ரேஸ் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், இன்று திட்டமிட்டப்படி ரேஸ் தொடங்குவதில் பிரச்னையானது. போட்டி நடைபெறும் டிராக்கில் செய்யப்பட்டிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பான FIA திருப்தி அடையாததால், ரேஸூக்கான அனுமதி சான்றிதழை வழங்காமல் தாமதித்தனர். ரேஸ் தொடர்பான ஒரு வழக்கும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. FIA வின் அனுமதி சான்றிதழை நீதிமன்றத்தில் சமர்பித்தால் மட்டுமே ரேஸை தொடங்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு மற்றும் ரேஸை நடத்தும் நிறுவனத்தினர் இரவு 9 மணி வரை FIA வின் அனுமதி சான்றிதழை சமர்பிக்க கால அவகாசம் கேட்டிருந்தனர்.

Race

நீதிமன்றம் சார்பில் இரவு 8 மணி வரை அவகாசம் கொடுக்கப்பட்டது. இந்நிலையில், மாலை 5.30 மணியளவில் டிராக்கை பரிசோதித்த FIA அமைப்பினர் அனுமதி சான்றிதழை வழங்கினர். ‘குறைந்தபட்ச பாதுகாப்பு நடைமுறைகள் இங்கே செய்யப்பட்டிருக்கிறது என்பதற்கு நாங்கள் உத்தரவாதம் கொடுக்கிறோம். ஆனால், இங்கே விபத்துகள் நேர்ந்தால் அதற்கு ரேஸை நடத்தும் நிறுவனம்தான் பொறுப்பேற்க வேண்டும்.’ எனக் கூறி சான்றிதழ் அளித்திருந்தனர்.

மதியம் 2:30 மணியளவில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து ரேஸை தொடங்கி வைப்பதாக இருந்தது. FIA அனுமதி கிடைப்பதில் தாமதமானதால் இந்த தொடக்க நிகழ்வும் தாமதமாகி இரவு 7:00 மணியளவில்தான் நடந்தது. அமைச்சர் உதயநிதி கொடியசைத்து தொடங்கி வைக்க வீரர்கள் தங்களது பயிற்சியை தொடங்கினர்.

இன்று நடைபெறுவதாக இருந்த முக்கியப் போட்டிகள் எல்லாம் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இரவு 11 மணி வரைக்கும் வீரர்கள் பயிற்சியில் மட்டுமே ஈடுபடுவார்கள் எனவும் சொல்லப்பட்டது.

இன்று நடைபெறாத போட்டிகளையும் சேர்த்து நாளை நடத்தும்பட்சத்தில் போட்டிகள் சீக்கிரமே தொடங்க அதிக வாய்ப்பிருக்கிறது. இன்று ரேஸை காணலாம் என ஆர்வமோடு வந்திருந்த சில ரசிகர்களும் ஏமாற்றத்தோடு திரும்பினர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.