Elon Musk: எக்ஸ் தளத்திற்குத் தடைவிதித்த பிரேசில் நீதிமன்றம் – சர்ச்சைக்குரிய பின்னணி என்ன?

“இனி எக்ஸ் வலைத்தளம் பிரேசிலில் இயங்காது. அங்கே எங்களின் அனைத்து சேவைகளையும் நிறுத்தப்போகிறோம்.” என்று எக்ஸ் சமூக வலைத்தளம் அறிவித்துள்ளது.

டிவிட்டர் நிறுவனத்தை எப்போது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் வாங்கினாரோ, அப்போதிலிருந்தே டிவிட்டர் பேசுபொருளாகவே இருந்து வருகிறது. இதில் டிவிட்டரின் பெயரை ‘எக்ஸ்’ என்று மாற்றியதும் அடங்கும். தற்போது எக்ஸ் வலைத்தளம் பிரேசில் நாட்டில் இயங்காது என்று அந்நிறுவனம் கூறியது மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளது.

எக்ஸ் தளம்

“பிரேசில் நாட்டுச் சட்டப்படி, பொய்யான செய்திகளையும், வெறுப்புணர்வையும் பரப்பும் எக்ஸ் கணக்குகளைத் தடை செய்யவில்லை.”என்று குற்றஞ்சாட்டி, கடந்த சில மாதங்களாகவே எலான் மஸ்க்கிற்கும், அந்நாட்டு நீதிபதியான அலெக்சாண்டர் டீ மோரேஸிற்கும் இடையே வார்த்தைப் போர் நடந்துகொண்டிருக்கிறது. இதன் ஒரு பகுதியாக நீதிபதி மோரேஸை ‘கிரிமினல்’ என எலான் மஸ்க் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டார். இது பெரும் சர்ச்சையானது.

கடந்த வியாழக்கிழமை, பிரேசிலில் இயங்கிவரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமான ஸ்டார்லிங்கின் வங்கிக் கணக்குகளை முடக்க நீதிபதி அலெக்சாண்டர் டீ மோரேஸ் உத்தரவிட்டார். தனக்கான எந்தவொரு சட்டப் பிரதிநிதியையும் எக்ஸ் நிறுவனம் நியமிக்கவில்லை என்பதும், சில ஆவணங்களைச் சமர்ப்பிக்காததற்காக நீதிமன்றம் விதித்த அபராதத்தைக் கட்டவில்லை என்பதும் காரணமாகக் கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து, தங்களது வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கான ஆணை வந்துள்ளதாக ஸ்டார்லிங்க் நிறுவனம் உறுதி செய்துள்ளது.

எலான் மஸ்க்

இந்நிலையில், இந்த மாத தொடக்கத்தில் எக்ஸ் வலைத்தளம் ‘தங்களது வலைத்தளம் இனி பிரேசிலில் இயங்காது.’ என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.