7 இளைஞர்களுக்கு `ஆயுள்’ சிறை – பழிக்குப்பழி கொலை வழக்கில் வேலூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

காஞ்சிபுரம் மாவட்டம், முட்டவாக்கம் காலனியைச் சேர்ந்த பூங்காவனம் என்பவரின் 22 வயது மகன் அஜித்குமார். கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை 13-ம் தேதி, ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி காவல் நிலைய எல்லைக்குஉட்பட்ட கீழ்வெண்பாக்கம் – வதியூர் சாலையில் அஜித்குமார் கொல்லப்பட்டுக் கிடந்தார். இந்த கொலையில் தொடர்புடையதாக முட்டவாக்கம் காலனிக்கு அருகேயுள்ள வத்தியூரைச் சேர்ந்த திருநாவுக்கரசு, சந்தானம், சர்மாமூர்த்தி, சிவா, ராஜசேகர், பரசுராமன், அஜித் என 7 இளைஞர்களை கைதுசெய்த நெமிலி போலீஸார், இவர்கள்மீது கொலை மற்றும் வன்கொடுமை … Read more

ஹெச்.ராஜா தலைமையில் தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு: அண்ணாமலை லண்டன் சென்ற நிலையில் ஏற்பாடு

சென்னை: சர்வதேச அரசியல் கல்வி பயிலஅண்ணாமலை லண்டன் சென்றநிலையில், கட்சிப் பணிகளை கவனிக்க, தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா தலைமையில் 6 உறுப்பினர்கள் கொண்ட ‘தமிழக பாஜக ஒருங்கிணைப்புக் குழு’ அமைக்கப்பட்டுள்ளது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சர்வதேச அரசியல் கல்வி பயிலுவதற்காக 28-ம் தேதி லண்டன் புறப்பட்டுச் சென்றார். அங்கு 3 மாதம் தங்கியிருந்து, புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் தொடர்பான படிப்பை மேற்கொள்ள இருக்கிறார். இதற்காக, பாஜக தலைமையிடம் முறையான அனுமதி பெற்று … Read more

குகி இனத்தவருக்கு தனி நிர்வாகத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்: மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் உறுதி

புதுடெல்லி: மணிப்பூரில் மைத்தேயி இனத்த வருக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் மணிப்பூரில் குகி மற்றும் மைத்தேயி இனத்தவர் இடையே கடந்தாண்டு மே மாதம் பயங்கர கலவரம் ஏற்பட்டது. இந்நிலையில் குகி இன பிரதிநிதிகள் டெல்லியில் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில், ‘‘குகி இனத்தவருக்கு சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசத்தை உருவாக்க வேண்டும். இது மட்டுமே பிரச்சினையில் இருந்து விடுபடும் ஒரே வழி.மைத்தேயி இனத்தைச் சேர்ந்த … Read more

குழந்தைகளின் உலகத்தரம் வாய்ந்த கல்விக்கு பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு கையெழுத்திட வேண்டும்! தமிழக முதல்வருக்கு மத்திய அமைச்சர் கடிதம்…

சென்னை: தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய மத்தியஅரசின் கல்வி நிதி நிறுத்தப்பட்டுள்ளது சர்ச்சையான நிலையில்,  அரசியல் வேறுபாடுகளைக் காட்டிலும் குழந்தைகளின் உலகத்தரம் வாய்ந்த கல்விக்குபி.எம்.ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு கையெழுத்திட வேண்டும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்து உள்ளது. பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் கையொப்பமிடுவதாக 15.03.2024ல் தமிழ்நாடு உறுதி அளித்திருந்தது. அதன்படி, பி.எம்.ஸ்ரீ. திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதி உள்ளார். … Read more

பொத்தேரி தனியார் கல்லூரி விடுதிகளில் கஞ்சா புழக்கம்! போலீஸார் ரெய்டில் 30 மாணவர்கள் கைது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாக வந்த புகாரை அடுத்து காலையிலேயே குவிந்த போலீஸார், ஆண்கள், பெண்கள் ஹாஸ்டலை கன்ட்ரோலுக்கு கொண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் போதை மாத்திரைகள், கஞ்சா உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு அதே கல்லூரியை சேர்ந்த 30 மாணவர்களை போலீஸார் கைது செய்தனர். Source Link

Yuvan Shankar Raja Net Worth: பின்னணி இசையின் கிங்.. யுவன் சங்கர் ராஜாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடிகளா?

சென்னை: தமிழ் திரைப்படத் துறையில் உள்ள முன்னணி நட்சத்திரங்களில் இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா (HBD Yuvan Shankar Raja) மிகவுமே முக்கியமான இடத்தைப் பெறுகின்றார். குறிப்பாக, இசைஞானி இளையராஜாவின் மகன் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவிற்குள் நுழைந்த யுவன் சங்கர் ராஜா, அதன் பின்னர் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுமே கொண்டாடும் இசை அமைப்பாளராக மாறினார்.

பள்ளிக்கூடத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 4 மாணவிகளுக்கு திடீர் உடல் நலக்குறைவு

போபால், மத்திய பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தில் உள்ள கயாரிபுரா நகரில் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் பள்ளி மாணவிகளுக்கு டெட்டனஸ் மற்றும் டிப்தீரியா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அப்போது தடுப்பூசி போட்டுக்கொண்ட மாணவிகளில் 4 பேருக்கு திடீரென மயக்கம், தலைச்சுற்றல் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக மாவட்ட … Read more

'மார்னிங் இந்தியா' ஜோ ரூட்டை வைத்து விராட் கோலியை மறைமுகமாக கலாய்த்த வாகன்

லண்டன், இலங்கைக்கு எதிராக இங்கிலாந்து தங்களுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து வென்ற நிலையில், 2-வது போட்டி நேற்று முன்தினம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 427 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக ஜோ ரூட் 143 ரன்களும், கஸ் அட்கின்ஷன் 118 ரன்களும் அடித்தனர். இலங்கை சார்பில் அதிகபட்சமாக அசிதா பெர்னாண்டோ 5 விக்கெட்டுகள் … Read more

கடும் வறட்சி: வன விலங்குகளை கொல்ல நமீபியா அரசு திட்டம்

தென் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நமீபியாவில் கடந்த அரை நூற்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் வறட்சி நிலவுகிறது. பசி, பட்டினி அதிகரித்துள்ள நிலையில், பசியால் வாடும் 14 லட்சம் மக்களுக்கு உணவளிக்க காட்டில் வாழும் வனவிலங்குகளை வேட்டையாடி அவற்றின் இறைச்சியை உணவாகப் பயன்படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் 83 யானைகள் உள்பட 723 காட்டு விலங்குகளை நமீபியா அரசு முடிவு செய்து இருக்கிறது. தென்னாப்பிரிக்க நாடுகளில் உள்ள உலகின் மிகப்பெரிய ஆப்பிரிக்க சவன்னா யானைகள் … Read more

Bollywood: `மாதவன் டு அனுராக் காஷ்யப்’ – பாலிவுட்டில் இது ரீ-ரிலீஸ் காலம்!

பெரிய படங்களின் ரிலீஸ் இல்லாத சமயத்தில் ‘ரீ – ரிலீஸ்’ என்ற யுக்தி பயன்படுத்தப்படுவது வழக்கம்தான். ஆனால் அதுவே தற்போது டிரண்டாக மாறியிருக்கிறது. சமீபத்தில் கோலிவுட்டில் விஜய்யின் ‘கில்லி’, சூர்யாவின் ‘வாரணம் ஆயிரம்’, தனுஷின் ‘3’ ஆகிய படங்கள் ரீ ரிலீஸின் மாஸ் காட்டின. தற்போது பாலிவுட்டும் ரீ- ரிலீஸில் மாஸ் காட்டவிருக்கிறது. ஏற்கெனவே திரையரங்குகளில் வெளியாகி ஹிட்டடித்த முக்கியமான திரைப்படங்கள் இந்த வாரம் பாலிவுட்டில் ரீ ரிலீஸாகியிருக்கிறது. Gangs of wasseypur இயக்குநர் அனுராக் காஷ்யப்பின் … Read more