கோவைக்குள் ஊடுருவும் வங்கதேசத்தினர்: நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலினுக்கு அசாம் முதல்வர் வலியுறுத்தல்

புதுடெல்லி: சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் நுழையும் வங்கதேச அகதிகள், தமிழ்நாட்டில் கோவையை குறிவைத்து அங்குள்ள ஜவுளித் தொழிற்சாலைகளில் வேலையில் சேர முயல்வதாக அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். இத்தகைய சட்டவிரோத ஊடுருவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து ஹிமந்தா பிஸ்வாசர்மா கூறியதாவது: வங்கதேசத்தில் கலவரச் சூழல் உருவாகியுள்ள நிலையில், அந்நாட்டைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவி வருகின்றனர். கடந்த 27-ம் தேதி அசாம் எல்லை வழியாகநுழைய … Read more

கடன் வாங்கும் உச்சவரம்பு வழக்கு; 5 நீதிபதி அமர்வை விரைவில் அமைக்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு மனு

புதுடெல்லி: கடன் வாங்குவது தொடர்பான பிரச்சினையில் மத்திய அரசுக்கும், கேரள அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இந்த நிலையில் நிகர கடன் மீதான உச்சவரம்பு தொடர்பாக மத்திய அரசுக்குஎதிராக கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு இந்த வழக்கை கடந்த ஏப்ரல் 1-ம் தேதி பரிந்துரை செய்தது. இதுவரை அரசியல் சாசன அமர்வு அமைக்கப்படாத … Read more

இலங்கை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு

கொழும்பு: இந்திய பெருங்கடல் பகுதியில் கடல்சார் பாதுகாப்பு குறித்து ஆலோசிப்பதற்காக கொழும்பு பாதுகாப்பு மாநாடு, இலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று நடந்தது. இதில் இந்தியா, இலங்கை, மாலத்தீவு மற்றும் மொரீசியஸ் நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள், துணை ஆலோசகர்கள் பங்கேற்றனர். வங்கதேசம் மற்றும் செஷல்ஸ் நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பார்வையாளர்களாக பங்கேற்றனர். இதில் பங்கேற்பதற்காக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இலங்கை சென்றார். அவர் அந்நாட்டு அதிபர் ரனில் விக்ரமசிங்கேவை நேற்று சந்தித்து இருதரப்பு பொருளாதார … Read more

சிவாஜி சிலை உடைந்ததற்கு மகாராஷ்டிர மக்களிடம் மன்னிப்பு கோரினார் பிரதமர் மோடி… காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை அடுத்து மௌனம் கலைத்தார்…

மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் நிறுவப்பட்ட 35 அடி உயர சத்ரபதி சிவாஜி சிலை கடந்த 26ம் தேதி சரிந்து விழுந்தது. 2023ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி கடற்படை தினத்தை ஒட்டி பிரதமர் மோடி திறந்து வைத்த இந்த சிலை விழுந்து நொறுங்கியதை அடுத்து காங்கிரஸ் மற்றும் சிவசேனா (உத்தவ் தாக்கரே) கட்சியினர் பாஜக மற்றும் ஆளும் சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) கூட்டணி மீது சரமாரி குற்றச்சாட்டு வைத்தனர். 2024 நாடாளுமன்ற … Read more

தனுஷ் பாட.. பிரியங்கா மோகன் ஆட.. அனிகா சுரேந்திரன் நடித்துள்ள NEEK முதல் பாடல் எப்படி இருக்கு?

சென்னை: நடிகர் தனுஷ் இயக்கத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி உள்ள ராயன் படம் மிகச் சிறப்பான வெற்றியை அவருக்கு பெற்று கொடுத்துள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள நிலையில் படம் 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. இந்நிலையில் அடுத்ததாக தனுஷ் இயக்கம், தயாரிப்பு மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள படம் நிலவுக்கு என் மேல்

குமரி தனியார் கல்லூரியின் 100 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நிறுத்தம்

சென்னை: கன்னியாகுமரி மெடிக்கல் மிஷன் ஆராய்ச்சி மையம் கல்லூரியின் 100 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டதால், அங்கு தற்காலிகமாக செய்யப்பட்ட இடஒதுக்கீட்டை ரத்து செய்து, திருத்தப்பட்ட இறுதி இடஒதுக்கீடு பட்டியல் வெளியிடப்பட்டது. அந்த கல்லூரியில் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின் கீழ் ஒதுக்கீட்டு ஆணைகள் பெற்ற 5 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வேறு கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான ஆன்லைனில் பொது கலந்தாய்வு கடந்த … Read more

“ஃபின்டெக் புரட்சியால் இந்தியாவில் மக்களின் வாழ்க்கை எளிதாகி இருக்கிறது” – பிரதமர் மோடி

மும்பை: ஃபின்டெக் புரட்சியால் இந்தியாவில் மக்களின் வாழ்க்கை எளிதாகி இருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்ற குளோபல் ஃபின்டெக் திருவிழா 2024-ல் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்ததாவது: இந்தியாவில் இது பண்டிகை காலம். நாம் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடினோம். தற்போது, நமது பொருளாதாரம் மற்றும் சந்தையிலும் ஒரு பண்டிகை சூழல் உள்ளது. இந்த பண்டிகை மனநிலையில், இந்த உலகளாவிய ஃபின்டெக் திருவிழா நடைபெறுகிறது. ஒரு காலத்தில், … Read more

பொன் மாணிக்கவேலுக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கிய மதுரை உயர்நீதிமன்றம்

மதுரை தமிழக முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேலுக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமீன் வழங்கி உள்ளது. காவல்துறை அதிகாரி காதர் பாட்சா உள்ளிட்ட பலர் மீது நெல்லை மாவட்டத்தில் இருந்த பழமையான சிலைகளை விற்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் காதர்பாட்ஷா கைதானார். தன்னை பழிவாங்கும் நோக்கில் பொய் வழக்கு பதிவு செய்தததாக கூறி  அப்போது  சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக இருந்த பொன். மாணிக்கவேலுக்கு எதிராக, உயர்நீதிமன்றத்தில் காதர் பாட்ஷா … Read more

மட்ட.. கோட் படத்தின் 4வது சிங்கிள் டைட்டில்.. ஃபேவரிட் பாடல் இதுதான்.. அர்ச்சனா கல்பாத்தி உற்சாகம்!

சென்னை: நடிகர் விஜய்யின் 68வது படமாக வெளியாகியுள்ள கோட் படம் இன்னும் சில தினங்களில் செப்டம்பர் 5ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் ரிலீசுக்காக திருவிழா கொண்டாட்ட மூடுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். படம் மிகவும் மாஸாக உருவாகியுள்ள நிலையில், மிகப்பெரிய வைபை ரசிகர்களுக்கு கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல்,

`தமிழ்நாட்டு தனியார் நிறுவனங்களில் தமிழருக்கே வேலைவாய்ப்பு!' – தனி சட்டம் இயற்ற சீமான் வலியுறுத்தல்

தமிழ்நாட்டிற்கு முதலீடு கொண்டு வர முதல்வர் அமெரிக்கா சென்றிருக்கும் வேளையில், தமிழ்நாட்டில் தொடங்கப்படும் தனியார் நிறுவனத்தில் தமிழர்களுக்கே வேலைவாய்ப்பினை தர தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில், “ஓசூரில் இயங்கும் டாடா மின்னணு நிறுவனம், தொழிற்சாலையில் பணியாற்ற உத்திரகண்ட் மாநிலத்திலிருந்து 4000 பெண்களை அழைத்து வரவிருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. ஏற்கனவே கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இதே நிறுவனம் பணித்தேவைக்காகச் சிறப்பு ரயில் மூலம் 800 … Read more