சென்னை பிராட்வேயில் ரூ.822.70 கோடியில் பல்நோக்கு ஒருங்கிணைந்த பேருந்து வளாகம் – தமிழக அரசு நிர்வாக அனுமதி
சென்னை: சென்னை மாநகராட்சி மூலம் சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் குறளகத்தை உள்ளடக்கிய, பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து வளாகத்தை ரூ.822.70 கோடியில் அமைக்க தமிழக அரசு நிர்வாக அனுமதியளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, நகராட்சி நிர்வாகத்துறை செயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சியால் பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் தங்க சாலை பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் 1960-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1964-ஆம் ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. பிராட்வே பேருந்து நிலையமானது வெளியூர் செல்லும் … Read more